News April 13, 2025
தேனி: மின்தடையா? இந்த நம்பருக்கு கால் பண்ணுங்க!

மழை மற்றும் பலத்த காற்று வீசும் நேரங்களில் பொதுவாக மின்சாரம் துண்டிக்கப்படும். அதுவும் குறிப்பாக இரவு நேரங்களில் மின்தடை ஏற்பட்டால் பலருக்கு யாரிடம் புகார் செய்வது என்பது தெரியாத நிலை உள்ளது. இந்த பிரச்சனையை தீர்ப்பதற்காகவே ‘94987 94987’ என்ற பிரத்யேக சேவை எண்ணை TNEB அறிவித்துள்ளது. இதன் மூலம் பயனாளர்கள் தமிழ்நாட்டின் எந்த மூலையில் இருந்தாலும் மின் வாரியத்தை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம்.SHARE!
Similar News
News April 15, 2025
தேனியில் ரூ.25,000 சம்பளத்தில் வேலை

தேனி மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் 20 க்கும் மேற்பட்ட விற்பனையாளர் பணிக்கு காலிபணியிடங்கள் உள்ளது. இந்த பணிக்கு10ம் வகுப்பு படித்த நபர்கள் விண்ணப்பிக்கலாம். முன் அனுபவம் தேவை இல்லை மாத ஊதியமாக ரூ.25 ஆயிரம் வரை வழங்கப்படும். இங்கு <
News April 15, 2025
தேனி:டீ மாஸ்டருக்கு கத்திக்குத்து

உத்தமபாளையத்தில் உள்ள ஒர் டீ கடையில் இதே ஊரை சேர்ந்த ராஜா, சுப்ரமணியன் என இருவர் வேலை செய்கின்றனர். இதில் ராஜாவை, கடையின் உரிமையாளர் வேலையை விட்டு நிறுத்தியுள்ளார். இதற்கு சுப்ரமணியன் தான் காரணம் என நினைத்த ராஜா, நேற்று காலை சுப்ரமணியனை கத்தியால் முகம், கழுத்து, கை உள்ளிட்ட பல பகுதிகளில் குத்தி விட்டு தப்பி ஓடிவிட்டார். சுப்ரமணியனை தேனி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
News April 14, 2025
தேனியில் மழைக்கு வாய்ப்பு

தென்மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இன்று(ஏப்ரல்.14) இரவு 10 மணி வரை இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என்று IMD தெரிவித்துள்ளது. அந்தவகையில் தேனி, தென்காசி, குமரி, நெல்லை, விருதுநகர் உட்பட 9 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளது என அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனவே பொதுமக்கள், குழந்தைகள் பாதுகாப்பாக வெளியில் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. *நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க