News October 23, 2024

தேனி மாவட்ட அளவிலான தடகள போட்டிகள்

image

ராயப்பன்பட்டி எஸ்.யூ.எம். மேல்நிலைப்பள்ளியில் தேனி வருவாய் மாவட்ட அளவிலான குடியரசு தின தடகள போட்டிகள் நேற்று(அக்.22) நடைபெற்றன. போட்டியில் 100 மீ., 200 மீ., 400 மீ., 800 மீ., 1200 மீ.,ஓட்டம், குண்டு எறிதல், தட்டு எறிதல், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன. மாவட்டத்தில் குறுவட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்கள் இப்போட்டிகளில் பங்கேற்றனர்.

Similar News

News January 25, 2026

தேனி: இளைஞர்கள் மீது தாக்குதல்

image

கூடலூர் பகுதியை சேர்ந்தவர் நவீன் குமார் (26). இவரது நண்பரான விருமாண்டி (28) என்பவருக்கும், அதே பகுதியை சேர்ந்த அபினேஷ் (24) என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்த முன்விரோதம் காரணமாக நேற்று முன் தினம் அபினேஷ் உள்ளிட்ட நான்கு பேர் நவீன்குமார் மற்றும் விருமாண்டியை கடுமையாக தாக்கியுள்ளனர். இதுகுறித்த புகாரில் கூடலூர் தெற்கு போலீசார் அபினேஷை நேற்று கைது செய்தனர்.

News January 25, 2026

தேனி: போடி அருகே ஒருவர் மீது தாக்குதல்

image

போடி அருகே பெருமாள்கவுண்டன்பட்டியை சேர்ந்தவர் கார்த்திக். இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த ஆசைத்தம்பி என்பவருக்கும் நிலம் வாங்குவது தொடர்பாக முன் விரோதம் இருந்தது. இந்த முன் விரோதத்தின் காரணமாக ஆசைத்தம்பி தூண்டுதலின் பேரில் கருத்தப்பாண்டி உள்ளிட்ட ஆறு பேர் கார்த்திக்கை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதுகுறித்த புகாரில் போடி தாலுகா போலீசார் கருத்தபாண்டியை கைது செய்து மற்றவர்களை தேடி வருகின்றனர்.

News January 25, 2026

தேனி: ரூ.6 செலுத்தினால், ரூ.1 லட்சம் – APPLY…!

image

தேனி மாவட்ட மக்களே.. போஸ்ட் ஆபீஸில் ‘பால் ஜீவன் பீமா யோஜனா’ என்ற திட்டத்தின் கீழ், நாள் ஒன்றுக்கு வெறும் ரூ.6 பிரீமியமாக செலுத்தினால், 5 வருடங்கள் கழித்து ரூ.1 லட்சம் வரை ஆயுள் காப்பீடு கிடைக்கும். இதனை 5 முதல் 20 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் பெயரில் தொடங்கலாம். கூடுதல் தகவலுக்கு உங்கள் அருகிலுள்ள போஸ்ட் ஆபீஸ்-ஐ அணுகவும். எல்லாரும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.

error: Content is protected !!