News April 9, 2024
தேனி மாவட்டத்தில் 88 லட்சம் பறிமுதல்

தேனி மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படையினரால் கடந்த மார் 17 ஆம் தேதி முதல் நேற்று (ஏப்.8) வரை ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதியில் ரூ.22,03,370, பெரியகுளம் சட்டமன்ற தொகுதியில் ரூ.15,76,900, போடி சட்டமன்ற தொகுதியில் ரூ.33,20,610, கம்பம் சட்டமன்ற தொகுதியில் ரூ.17,09,940 என மாவட்ட அளவில் மொத்தம் ரூ.88,10,820 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என மாவட்டத் தேர்தல் நடத்தும் அலுவலர் அறிவித்துள்ளார்.
Similar News
News March 6, 2026
தேனி: சாலை விபத்தில் ஒருவர் பரிதாப பலி.!

கம்பம் பகுதியை சேர்ந்தவர் தங்கராஜ் (65). இவர் நேற்று (மார்.5) வீரபாண்டி அருகே பைபாஸ் சாலையில் அவரது பைக்கில் சென்றுள்ளார். அப்போது இவருக்கு பின்னால் வந்த அடையாளம் தெரியாத நான்கு சக்கர வாகனம், இவர் பைக் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த தங்கராஜ் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் உயிரிழந்தார். விபத்து குறித்து வீரபாண்டி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
News March 6, 2026
தேனி: சிங்கப்பூரில் இருந்து வந்தவர் தற்கொலை.!

ஆண்டிபட்டியை சேர்ந்தவர் கணேசன் (37). இவர் பல வருடங்களாக சிங்கப்பூரில் வேலை பார்த்து வந்த நிலையில் கடந்த சில மாதங்களாக அவரது சொந்த ஊரில் தங்கி உள்ளார். இங்கு சரியான வேலை இல்லாமலும் போதிய வருமானம் இல்லாமலும் கணேசன் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். மன உளைச்சல் காரணமாக நேற்று முன்தினம் கணேசன் அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ஆண்டிபட்டி போலீசார் வழக்கு பதிவு.