News October 25, 2024

தேனி மாவட்டத்தில் 32 வீடுகள் மழையால் சேதம்

image

தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக இம்மாத தொடக்கத்தில் இருந்து நேற்று(அக்.24) வரை மாவட்டத்தில் மொத்தம் 32 வீடுகள் சேதமடைந்துள்ளன. பகுதி சேதமடைந்த வீடுகளுக்கு அரசு பேரிடர் நிதியில் இருந்து தலா ரூ.4 ஆயிரம் வீதம் 19 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News August 11, 2025

மாநில அளவிலான பெருந்திரல் உறுதிமொழி ஏற்கும் நிகழ்வு

image

தமிழ்நாடு துணை முதலமைச்சர் இன்று (11.08.2025) காலை 10 மணி அளவில் போதைப் பொருட்கள் இல்லா தமிழ்நாடு-மாநில அளவிலான பெருந்திரல் உறுதிமொழி ஏற்கும் நிகழ்வினை காணொளி காட்சி வாயிலாக தொடங்கி வைக்க உள்ளார்கள். அதனைத் தொடர்ந்து, லட்சுமிபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் உறுதிமொழி ஏற்கும் நிகழ்வு மற்றும் பிற விழிப்புணர்வு நிகழ்வுகள் நடைபெற உள்ளது. ஆட்சியர், எம்.பி, எம்.எல்.ஏ. பங்கேற்கின்றனர்.

News August 10, 2025

தேனி மாவட்ட இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

image

தேனி மாவட்டத்தில் இன்று (10.08.2025) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை தேனி துணை காவல் கண்காணிப்பாளர் ராஜன் தலைமையில் இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேவை உள்ளவர்கள் அந்தந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம் எனவும் தெரிவித்துள்ளது.

News August 10, 2025

தேனியில் மழை பெய்யும் – வானிலை மையம்

image

தேனி மாவட்டத்தில் இன்று இரவு 9 மணி வரை இடி, மின்னலுடன கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த 2 நாட்களாக அவ்வப்போது கனமழை பெய்து வரும் நிலையில், இன்றும் மழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!