News August 19, 2024

தேனி மாவட்டத்தில் தேசிய குடல்புழு நீக்கல் சிறப்பு முகாம்

image

தேனி மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற பகுதியில் உள்ள 1 முதல் 19 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு மற்றும் 20 வயது முதல் 30 வயது வரை உள்ள பெண்களுக்கு தேசிய குடல்புழு நீக்கல் நாள் ஆகஸ்ட் 23ஆம் தேதி சுகாதார நிலையம் அங்கன்வாடி மையம் அரசு பள்ளி வளாகத்தில் நடைபெறுகிறது. விடுபட்ட குழந்தைகளுக்கு ஆகஸ்ட் 30ஆம் தேதி அன்றும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளதாக தேனி மாவட்ட ஆட்சி தலைவர் ஷஜீவனா தகவல் தெரிவித்துள்ளார்.

Similar News

News November 9, 2025

தேனியில் பரவும் குண்டு காய்ச்சல்

image

தேனி மாவட்டத்தில் தற்போது குளிர் காலம் தொடங்குவதால், சில பசுக்களுக்கு காய்ச்சல் ஏற்பட்டு வருகிறது. இது குறித்து கால்நடை துறையினர் கூறுகையில், இந்த வகை காய்ச்சல் கொசு மற்றும் ஒரு வித பூச்சி கடியால் ஏற்படுகிறது. கால்களில் குழம்புகளில் முன்னும் பின்னும் குண்டு போன்று ஏற்படும். எனவே இதை குண்டு காய்ச்சல் என்றும் அழைக்கின்றனர். இது 3 நாட்களில் சரியாகி விடும் அச்சம் தேவையில்லை என தெரிவித்தனர்.

News November 9, 2025

தேனி: EB பில் அதிகம் வருகிறதா? இத பண்ணுங்க!

image

தேனி மக்களே, கொஞ்சமா கரண்ட் யூஸ் பண்ணாலும், அதிகமா பில் வருதா? இதை தெரிஞ்சுக்க வழி இருக்கு! <>இங்கு கிளிக்<<>> செய்து TNEB பில் கால்குலேட்டர்லில் (Domestic) என்பதை தேர்ந்தெடுத்து, இரண்டு மாதத்தில் ஓடிய மொத்த யூனிட்டை பதிவு செய்து 100 யூனிட் இலவச சலுகையுடன் நீங்கள் கட்ட வேண்டிய சரியான தொகையை காண்பிக்கும். பில் கூட வந்தா 94987 94987 எண்ணில் புகார் செரிவிக்கவும். இந்த பயனுள்ள தகவலை SHARE செய்யுங்க.

News November 9, 2025

தேனி: இந்த தேதிகளில் கனமழை

image

தேனி மக்களே, மன்னார் வளைகுடா மற்றும் அதை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளின் மேல், ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதேபோல், தமிழக பகுதிகளின் மேல், ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தேனியில் வருகிற 12, 13ம் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனை ஷேர் செய்து தெரியப்படுத்துங்க.

error: Content is protected !!