News April 5, 2025

தேனி : மாணவியை கேலி செய்தவருக்கு ஓராண்டு சிறை

image

பெரியகுளம் பகுதியை சேர்ந்த சிபிராஜா என்பவரை பெரியகுளம் போலீசார் கடந்த 2022-ம் ஆண்டு 7-ம் வகுப்பு படித்து வந்த மாணவியை பின் தொடர்ந்து சென்று கேலி செய்த வழக்கில் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை தேனி மாவட்ட போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சிபிராஜாவுக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதித்து நேற்று (ஏப்.4) நீதிபதி பி.கணேசன் உத்தரவிட்டார்.

Similar News

News April 5, 2025

தேனி : அனைத்து கனிமங்களுக்கும் இ-பெர்மிட் கட்டாயம்

image

தேனி மாவட்ட புவியியல், சுரங்கத்துறை சார்பில் 2024 முதல் www.mimastn.gov.in என்ற இணையத்தளம் மூலம் குவாரியில் இருந்து எடுத்து செல்லும் கனிமங்களுக்கு மொத்த அனுமதிக்கான சீட்டு வழங்கப்படும் நடைமுறை உள்ளது. எம்.சாண்ட், ஜல்லி போன்ற கனிமங்கள் ஏற்றிச் செல்லும் போது புவியியல் மற்றும் சுரங்கத்துறை அலுவலகத்தில் இருந்து உரியநடைச்சீட்டு பெற்று கொண்டுசெல்ல வேண்டும் என்பது கட்டாயம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

News April 5, 2025

தேனியில் இன்ஜினீயரிங் படித்தவர்களுக்கு வேலை

image

தேனி மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் 25க்கும் மேற்பட்ட மின் தொழில்நுட்பாளர் (Electrical Technician) காலிபணியிடங்கள் உள்ளது. இந்த பணிக்கு பெறியியல் (EEE) படித்த 18 வயது முதல் 40 வயது வரை உள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம். மாத ஊதியமாக ரூ.15 ஆயிரம் வரை வழங்கப்படும். முன் அனுபவம் தேவையில்லை. இங்கு கிளிக் செய்து 01-05-2025க்குள் விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் நபர்களுக்கு ஷேர் செய்யுங்கள்

News April 4, 2025

தேனி மாவட்ட இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

image

தேனி மாவட்டத்தில் இன்று 04.04.2025 இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேவையுள்ளவர்கள் அந்தந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம் எனவும் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!