News August 7, 2025

தேனி மாணவர்களே நேரடி சேர்க்கைக்கான தேதி நீட்டிப்பு

image

தேனி, ஆண்டிபட்டி மற்றும் போடிநாயக்கனூர் (இருப்பு தப்புக்குண்டு சாலை, உப்பார்பட்டி) ஆகிய இடங்களில் அமைந்துள்ள அரசு தொழில் பயிற்சி நிலையங்களில் 2025ஆம் ஆண்டுக்கான மாணவர்கள் நேரடி சேர்க்கை ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே, விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரில் சென்று விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் ரஞ்சீத் சிங் தெரிவித்துள்ளார்.

Similar News

News August 7, 2025

நாளை ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் நடைபெறும் இடங்கள்

image

சின்னமனூர், வீரபாண்டி பேரூராட்சி, பெரியகுளம் வட்டாரம் பகுதிகளில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் நாளை (08.08.2025) வெள்ளிக்கிழமை நடைபெறும் இடங்களை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது. பொதுமக்கள் இம்முகாமில் கலந்து கொண்டு, ரேஷன் கார்டு, ஆதார் திருத்தம், மகளிர் உரிமைத்தொகை உள்ளிட்ட தேவைகளை நிவர்த்தி செய்யலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News August 7, 2025

தேனி: கேஸ் DELIVERY அப்போ இதை பண்ணுங்க!

image

தேனி மக்களே உங்க வீட்டுக்கு கேஸ் சிலிண்டர் போட வருபவர் BILL விலையை விட அதிக பணம் கேட்குறங்களா? இனி கவலை வேண்டாம். கேஸ் ரசீதில் உள்ள விலையைவிட அதிகமாக பணம் கேட்டால் 18002333555 எண்ணுக்கு அல்லது https://pgportal.gov.in/ இந்த இணையதளத்தில் புகாரளியுங்க. இண்டேன், பாரத்கேஸ் மற்றும் ஹெச்பி க்கும் இந்த எண்ணில் புகாரளிக்கலாம். இந்த சந்தோஷமான தகவலை மற்றவர்களுக்கு தெரியபடுத்த SHARE பண்ணுங்க.

News August 7, 2025

தேனி: மருத்துவ படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம்

image

தேனி: முன்னாள் படைவீரர்கள், அவர்களைச் சார்ந்தவர்களின் சிறார்கள் மருத்துவ படிப்பிற்கு விண்ணப்பிக்கும் KSB Portal பராமரிப்பு பணிகள் நடக்கிறது. எனவே எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., படிக்க விண்ணப்பிக்க விரும்புவோர் www.desw.gov.in மற்றும் www.dgrindia.gov.in என்ற இணையதளத்தில் ஆக.15 வரை விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு 04546 252185 எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் ரஞ்ஜீத்சிங் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!