News September 16, 2025

தேனி: மாணவர்களுக்கு கல்விக்கடன் முகாம் அறிவிப்பு

image

தேனி மாவட்டம் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு சிறப்பு கல்விக்கடன் முகாம் செப்டம்பர் 17ஆம் தேதி தேனி கம்மவார் சங்கர் தொழில்நுட்ப கல்லூரி வளாகத்தில் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் ரஞ்சித் சிங் தெரிவித்துள்ளார். இந்த முகாம் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது. இதற்காக கல்லூரி மாணவ மாணவிகள் தங்களுடைய அனைத்து ஆவணங்களையும் முகாமுக்கு கொண்டு சென்று பயன் பெறலாம் தெரிவித்துள்ளனர்.

Similar News

News September 16, 2025

தேனி: எலக்ட்ரீசியன் மர்ம மரணம்

image

பூதிப்புரத்தை சேர்ந்த எலக்ட்ரீசியன் சிவக்குமார் 42. திருமணம் ஆகவில்லை. இவர் பூபால சமுத்திரக் கண்மாய் அருகே நஞ்சுண்ட ஈஸ்வரன் கோயில்வளாகத்தில் இறந்து கிடப்பதாக பழனிசெட்டிபட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.போலீசார் உடலைகைப்பற்றி தேனி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் ரத்த அழுத்தம் காரணமாகஉயிரிழந்திருக்கலாம் என தெரியவந்துள்ளது.

News September 16, 2025

தேனி: இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

image

தேனி மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை தேனி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் பெரியசாமி தலைமையில், இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை, மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேவையுள்ளவர்கள் அந்தந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம் எனவும் தெரிவித்துள்ளது.

News September 16, 2025

தேனி மாவட்டத்தில் இரவு ரோந்து காவலர்களின் விபரம்

image

தேனி மாவட்டத்தில் இரவு ரோந்து காவலர்களின் விபரம் தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளம், ஆண்டிபட்டி, தேனி, போடிநாயக்கனூர், உத்தமபாளையம் தாலுகாக்களில் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் கைபேசி எண்கள் மற்றும் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அவசர தேவைகளுக்கு இந்த விவரங்களை பயன்படுத்திக் கொள்ளலாம்.

error: Content is protected !!