News September 17, 2025
தேனி: மாணவர்களுக்கான கல்விக் கடன் முகாம்

மாவட்ட நிர்வாகம், முன்னோடி வங்கி சார்பில் கல்லுாரி மாணவர்களுக்கான கல்விக்கடன் முகாம் இன்று தேனி கம்மவார் சங்க தொழில்நுட்பகல்லுாரி வளாகத்தில் நடைபெறுகிறது. பொறியியல், மருத்துவம், வேளாண், தோட்டக்கலை, கால்நடை மருத்துவம், கலை, அறிவியல், சட்டம், தொழிற்பயிற்சி, பாலிடெக்னிக் படிக்கும் மாணவர்கள் பங்கேற்கலாம். கடன் பெற விரும்பும் மாணவர்கள் முகாமிற்கு வந்து பயனடையுமாறு கலெக்டர் ரஞ்ஜீத்சிங் தகவல். SHARE IT.
Similar News
News September 17, 2025
தேனி மாவட்டத்தில் வாக்குசாவடிகள் அதிகரிப்பு

கடந்த லோக்சபா தேர்தலின் போது 4 சட்டசபை தொகுதிகளில் 563 அமைவிடங்களில், 1226 ஓட்டுச்சாவடிகள் இருந்தன. தற்போதைய கணக்கெடுப்பு, மறுவரையறுதல் பணிக்குப்பின் 591 அமைவிடங்களில் 1394 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 28 அமைவிடங்கள் 168 ஓட்டுச்சாவடிகள் அதிகரித்துள்ளன. அதிகபட்சமாக பெரியகுளம் (தனி) தொகுதியில் 14 அமைவிடங்கள் 62 ஓட்டு சாவடிகள் அதிகரித்துள்ளது. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
News September 17, 2025
தேனி: வேலைநாடும் இளைஞர்கள் கவனத்திற்கு

தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமானது வரும் செப்.19 வெள்ளிக்கிழமை அன்று காலை 10 மணி முதல் மதியம் 2.00 மணி வரை தேனி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலக வளாகத்தில் நடைபெறவுள்ளது. இம்முகாமில் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப்படிப்பு மற்றும் ஐ.டி.ஐ, டிப்ளமோ ஆகிய கல்வித்தகுதி உடைய வேலைநாடுநர்கள் கலந்து கொள்ளவும். மேலும் தகவலுக்கு இந்த <
News September 16, 2025
தேனியில் நாளை உங்களுடன் ஸ்டாலின் முகாம்

தேனி மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் செப். 17ம் தேதி நடைபெறும் விவரங்கள். இதில், தேனி அல்லிநகரம் நகராட்சி 17, 18 வார்டுகளுக்கு மல்லிகை மஹாலில் முகாம், போடி நகராட்சி 11, 13 வார்டுக்கு சேது மறவர் திருமண மண்டபத்தில் முகாம், தேனி அருகே கொடுவிலார்பட்டியில் வீரு நாகம்மாள் மண்டபத்தில் முகாம், பெரியகுளம் அருகே சருத்துபட்டியில் ஜெயமருதை மஹாலில் முகாம் நடைபெறும் என தெரிவித்துள்ளனர்.