News December 9, 2025

தேனி: மாடு வாங்க ரூ.1.2 லட்சம் கடனுதவி..!

image

தமிழக அரசின் TABCEDCO மூலம் ஒரு பயனாளிக்கு, 2 கறவை மாடுகள் வாங்க ரூ.1,20,000 கடனுதவி வழங்கப்படுகிறது. இந்த கடனை திருப்பி செலுத்த 3 ஆண்டுகள் கால அவகாசமும் உண்டு. இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் <>tabcedco.ne<<>>t என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். குறிப்பு: கடனுதவி பெற மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் உறுப்பினராக இருக்க வேண்டும். இந்த தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!

Similar News

News December 10, 2025

தேனி: SBI வங்கியில் வேலை.. தேர்வு இல்லை! APPLY

image

தேனி மக்களே, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள Customer Relationship Executive 284 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. 20 – 35 வயதுகுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் டிச. 23க்குள் <>இங்கு க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.51,000 வழங்கப்படும். இதற்கு தேர்வு கிடையாது. நேர்முகத் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். இந்த பயனுள்ள தகவலை SHARE செய்யுங்க.

News December 10, 2025

தேனி: மாணவர்களுக்கு கல்வி கடன்; மிஸ் பண்ணிடாதீங்க.!

image

தேனி மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கி சார்பாக மாவட்ட அளவிலான கல்விக்கடன் முகாம் (Education Loan Camp) வடபுதுப்பட்டி நாடார் சரஸ்வதி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் இன்று (டிச.10) நடைபெற உள்ளது. எனவே, உயர்கல்வி பயில கல்விக்கடன் தேவைப்படும் மாணவர்கள் இக்கல்விக்கடன் முகாமினை தவறாது பயன்படுத்திக் கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

News December 10, 2025

தேனியில் கபீர்புரஸ்கார் விருது பெற விண்ணப்பிக்கலாம்

image

சமுதாய மற்றும் வகுப்பு நல்லிணக்கத்திற்கான “கபீர்புரஸ்கார் விருது” ஒவ்வொரு ஆண்டும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால், குடியரசு தின விழாவின் போது வழங்கப்படுகிறது. கபீர்புரஸ்கார் விருது பெற தகுதியானவர்கள் https://awards.tn.gov.in என்ற இணையதளத்தின் வாயிலாக 15.12.2025-க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!