News December 22, 2025

தேனி: மதுபோதையில் இளைஞர் கொலை!

image

உத்தமபாளையம் பகுதியை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி (26). இவர் தனது நண்பா்களுடன் நேற்று (டிச.21) இரவு கம்பத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் சாப்பிட்டுக் கொண்டிருந்தாா். அங்கு முகிலன், சிபிசூா்யா உள்ளிட்ட நண்பர்களும் சாப்பிட்டுக் கொண்டிருந்தனா். அப்போது மதுபோதையில் இரு பிரிவினருக்கிடையே தகராறு ஏற்பட்டதில் சத்தியமூர்த்தி கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து கம்பம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை.

Similar News

News January 28, 2026

பெரியகுளம்: தீ விபத்தில் இளம்பெண் உயிரிழப்பு

image

பெரியகுளம் பகுதியை சேர்ந்த பிரியதர்ஷினி (21) மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்து வந்துள்ளார். 2 தினங்களுக்கு முன்பு வெளியில் சென்ற பிரியதர்ஷினியை அவரது தாயார் வீட்டின் உள்ளே வைத்து பூட்டிவிட்டு சென்றுள்ளார். அப்பொழுது பிரியதர்ஷினி எதிர்பாராத விதமாக தனக்கு தீ வைத்துக் கொண்டார். இதில் படுகாயம் அடைந்த அவர் GH-ல் சேர்க்கப்பட்ட நிலையில் நேற்று உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு.

News January 28, 2026

பெரியகுளம்: மனைவி கொலை – கணவருக்கு ஆயுள்!

image

பெரியகுளம் அருகே கீழவடகரயை சேர்ந்த தம்பதி கௌதமன் – சந்தியா. கடந்த 2021ம் ஆண்டு சந்தியா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக பெரியகுளம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடற்கூராய்வில் சந்தியா கழுத்தை நெறித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. போலீசார் தீவிர விசாரணையில் வரதட்சனை காரணமாக கௌதமன் கொலை செய்தது உறுதியானது. இந்நிலையில் நேற்று (ஜன 27) கௌதமனுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

News January 28, 2026

தேனி: ரூ.5 லட்சம் வரை இலவச சிகிச்சை ! APPLY NOW

image

தேனி மக்களே முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை சிகிச்சை பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் இணைய விரும்புவோர் குடும்ப அட்டை, ஆதார் மற்றும் வருமானச் சான்றிதழுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலுள்ள மையத்தில் பதிவு செய்து அடையாள அட்டை பெற்றுக்கொள்ளலாம். கூடுதல் தகவல்களுக்கு 1800 425 3993 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம். SHARE IT

error: Content is protected !!