News April 7, 2025

தேனி மக்கள் நீதிமன்றத்தில் வேலை

image

தேனி மாவட்டம் நிரந்தர மக்கள் நீதிமன்றத்தில் காலியாக உள்ள 1 உறுப்பினர் பதவிக்கு பட்டப்படிப்பு படித்த நபர்கள் விண்ணப்பிக்கலாம்.விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள்<> இங்கு<<>> கிளிக் செய்து  ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை 21.04.2025 தேதி மாலை 5.00 மணிக்குள் அனுப்ப வேண்டும் என முதன்மை மாவட்ட நீதிமன்ற நீதிபதி  தெரிவித்துள்ளனர். வேலை தேடும் நண்பர்களுக்கு ஷேர் செய்யவும் 

Similar News

News April 7, 2025

தேனி : 55 வயது பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபர்

image

ஆண்டிபட்டி அருகே உள்ள வடக்கு மூனாண்டிபட்டியை சேர்ந்த 55 வயது கொண்ட பெண் ஒருவர் அவரது வீட்டில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தபோது, அதே பகுதியை சேர்ந்த பேயத்தேவர் என்பவரின் மகன் பெரிய கருப்பன்(23) என்பவர் திடீரென வீட்டிற்குள் நுழைந்து படுத்திருந்த பெண்ணை பலாத்காரம் செய்ய முயற்சித்துள்ளார். பெண் கொடுத்த புகாரின் பேரில் ஆண்டிபட்டி அனைத்து மகளிர் போலீசார் பெரிய கருப்பனை கைது செய்தனர்.

News April 7, 2025

தேனி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட விபரம்

image

தேனி மாவட்ட அணைகளின் (ஏப்ரல் 07) நீர்மட்டம்: வைகை அணை: 56.69 (71) அடி, வரத்து: 504 க.அடி, திறப்பு: 72  க.அடி, பெரியாறு அணை: 113.70 (142) அடி, வரத்து: 493 க.அடி, திறப்பு: 105 க.அடி, மஞ்சளார் அணை: 33 (57) அடி, வரத்து: 115 க.அடி, திறப்பு: இல்லை, சோத்துப்பாறை அணை: 89.21 (126.28) அடி, வரத்து: 32.74 க.அடி, திறப்பு: 3 க.அடி, சண்முகா நதி அணை: 35.30 (52.55) அடி, வரத்து: 14 க.அடி, திறப்பு: இல்லை.

News April 7, 2025

தேனி இளைஞர்களுக்கு வேலை ரேடி

image

தேனி மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் 20க்கும் மேற்பட்ட பேக்கிங் மேற்பார்வையாளர் பணிக்கு காலிபணியிடங்கள் உள்ளது. இந்த பணிக்கு ஏதாவது ஒர் பட்டப்படிப்பு படித்திருந்தாலே போதும். மாத ஊதியமாக ரூ.25 ஆயிரம் வரை வழங்கப்படும். முன் அனுபவம் தேவையில்லை.<> இங்கு கிளிக்<<>> செய்து இந்த மாதம் 16-க்குள் விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் நபர்களுக்கு SHARE செய்யுங்க.

error: Content is protected !!