News September 3, 2025

தேனி மக்களே உஷாரா இருங்க..!

image

தேனி மக்களே ஆன்லைன் Loan App-களை பதிவிறக்கம் செய்யும் போது கைபேசியில் உள்ள Contact, Photo மற்றும் இதர தகவல் அனைத்தும் திருடப்படும். கடன் பெற்ற நபரின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து Phone contact இல் உள்ள நபர்களுக்கு அனுப்பி மிரட்டி பணம் பறிப்பார்கள். எனவே இதுபோன்று யாராவது உங்களை மிரட்டினால் தயங்காமல் 1930 என்ற எண்ணிற்கு அழைக்கலாம் அல்லது<> இந்த இணையதளத்தில்<<>> புகார் அளிக்கலாம். SHARE IT..!

Similar News

News September 5, 2025

தேனி: பேச்சு போட்டியை அறிவித்த கலெக்டர்

image

2025-2026-ம் நிதியாண்டில் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளையொட்டி 09.09.2025 அன்றும், தந்தை பெரியாரின் பிறந்தநாளையொட்டி 10.09.2025 அன்றும், தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகள் (6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை) மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களிடையே பேச்சுப் போட்டிகள் தனித்தனியாக நடைபெறவுள்ளது என்று தேனி கலெக்டர் அறிவித்துள்ளார். SHARE IT NOW

News September 5, 2025

தேனி: ரேஷன் கடைக்கு போறீங்களா? இத பண்ணுங்க!

image

தேனி மக்களே ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை இனி வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம் உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். தெரிந்தவர்களுக்கு மறக்காம SHARE பண்ணுங்க

News September 5, 2025

தேனி மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை

image

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதில் செப்.9 அன்று தேனி மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE IT

error: Content is protected !!