News September 9, 2025
தேனி மக்களே உங்க பிரச்சனைக்கு ஒரே இடத்தில் தீர்வு

தேனி மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் நாளை (10-09-25) நடக்கிறது இம்முகாம்களில் மகளிர் உரிமைத்தொகை, பட்டா மாறுதல், கடனுதவி உட்பட நகரப்பகுதிகளில் 13 துறைகள் மூலம் 43 சேவைகளும், ஊரகப்பகுதிகளில் 15 துறைகள் மூலம் 46 சேவைகளும் அளிக்கப்படுகிறது. இதில் வழங்கப்படும் சேவைகள், அதற்கான ஆவணங்கள், முகாம் நடைபெறும் இடங்களை <
Similar News
News September 10, 2025
தேனி மாவட்டத்தில் இரவு ரோந்து காவலர் விபரம்

தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளம், ஆண்டிபட்டி, தேனி, போடிநாயக்கனூர், உத்தமபாளையம் தாலுகாக்களில் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் கைபேசி எண்கள் மற்றும் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அவசர தேவைகளுக்கு இந்த விவரங்களை பயன்படுத்திக் கொள்ளலாம். இன்று (08.09.2025) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் விவரம்.
News September 10, 2025
நாளை 10.09.2025 ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்

தேவதானப்பட்டி, போடிநாயக்கனூர், தேனி, பெரியகுளம் வட்டாரம் பகுதிகளில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் நாளை (10.09.2025) புதன்கிழமை நடைபெறும் இடங்களை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது. பொதுமக்கள் இம்முகாமில் கலந்து கொண்டு, ரேஷன் கார்டு, ஆதார் திருத்தம், மகளிர் உரிமைத்தொகை உள்ளிட்ட தேவைகளை நிவர்த்தி செய்யலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
News September 9, 2025
தேனி: நிலை தடுமாறிய ஆட்டோவால் பறிபோன உயிர்

ஆண்டிபட்டி பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனரான சந்திரன் நேற்று (செப்.8) ஆண்டிபட்டியில் இருந்து இலைக்கட்டுகளை ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு தேனி நோக்கி சென்றுள்ளார். க.விலக்கு அருகே வந்தபோது நிலை தடுமாறிய ஆட்டோ கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இவ்விபத்தில் படுகாயம் அடைந்த சந்திரன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து க.விலக்கு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.