News September 2, 2025

தேனி மக்களே இந்த எண்கள் ரொம்ப முக்கியம்..!

image

தேனியில் பணியாற்றும் முக்கிய அதிகாரிகளின் தொடர்பு எண்களை 2025 UPDATE செய்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
⏩ தேனி மாவட்ட ஆட்சியர் – ரஞ்சித் சிங் – 4546-253676
⏩ தேனி காவல்துறைக் கண்காணிப்பாளர் – சினேஹா ப்ரியா – 4546 254100
⏩ மாவட்ட வருவாய் அலுவலர் – மகாலெட்சுமி – 4546-254946
⏩ மாவட்ட திட்ட அலுவலர் – அபிதா ஹனிப் – 4546-254517
இந்த பயனுள்ள எண்களை SAVE பண்ணிவிட்டு நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.!

Similar News

News November 14, 2025

தேனி: தலைவலியால் ஒருவர் விஷமருந்தி தற்கொலை.!

image

ஓடைப்பட்டி அருகே கரிச்சிபட்டியை சேர்ந்தவர் முருகன் (47). இவருக்கு 6 வருடங்களுக்கு முன்பு ஏற்பட்ட விதத்தின் காரணமாக தீராத தலைவலி இருந்து வந்துள்ளது. அதற்கு சிகிச்சை எடுத்தும் பலனளிக்காத காரணத்தினால் 2 தினங்களுக்கு முன்பு முருகன் விஷம் அருந்தி உள்ளார். அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் நேற்று (நவ.13) அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து ஓடைப்பட்டி போலீசார் வழக்கு பதிவு.

News November 14, 2025

தேனி: ஜூஸ் வியாபரி தற்கொலையில் மர்மம்

image

தஞ்சாவூர், பள்ளிகொண்டான் பகுதியை சேர்ந்தவர் சதீஷ் (34). இவர் கம்பத்தில் 4 வருடங்களாக ஜுஸ் கடை வைத்து நடத்தி வருகின்றார். இவருக்கு திருமணமகாத நிலையில் கடையின் அருகே வேலை செய்யும் பொம்முதாய் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு அவருடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன் தினம் வீட்டில் யாரும் இல்லாத பொழுது சதீஷ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கம்பம் போலீசார் வழக்கு (நவ.13) பதிந்து விசாரணை.

News November 14, 2025

தேனி: நகராட்சி பணியாளரை கத்தியால் குத்தியவர் கைது

image

பெரியகுளம் தென்கரை பகுதியில் நேற்று (நவ.13) பெரியகுளம் நகராட்சி சார்பில் சாலை பணி நடைபெற்று உள்ளது. அங்கு வந்த காமராஜ் (27) என்பவர் பணியில் இருந்தவர்களிடம் மாமுல் கேட்டு தகராறு செய்துள்ளார். அதனை நகராட்சி தற்காலிக பணியாளர் தினேஷ் தட்டி கேட்ட நிலையில் அதனால் ஆத்திரமடைந்த காமராஜ், தினேஷை கத்தியால் குத்தி தாக்கியுள்ளார். இதுகுறித்து தென்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து காமராஜை கைது செய்தனர்.

error: Content is protected !!