News October 29, 2025

தேனி: மகளின் விபரீத முடிவால் தாய் தற்கொலை.!

image

வீரபாண்டி அருகே வயல்பட்டியை சேர்ந்தவர் ஈஸ்வரி (44). இவரது மகளை தனது தம்பிக்கு 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து வைத்துள்ளார். இந்நிலையில் ஈஸ்வரியின் மகள் 6 மாதங்களுக்கு முன்பு வடமாநில நபரை அழைத்துக் கொண்டு ஊரைவிட்டு சென்றுவிட்டார். இதனால் மன வேதனையில் இருந்து வந்த ஈஸ்வரி (அக்.27) அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து வீரபாண்டி போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.

Similar News

News October 29, 2025

தேனி வைகை அணையில் இன்று தண்ணீர் திறப்பு

image

தேனி மாவட்ட வைகை அணையில் இருந்து, மதுரை, திண்டுக்கல் செல்லும் 58 கிராம கிட்ட கால்வாயில் 300 மி.கா அடி தண்ணீரை நீர் இருப்பு மற்றும் நீர்வாகத்தினை பொறுத்து தேவைக்கேற்ப 29.11.25 முதல் வினாடிக்கு 150 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் ஆட்சித் தலைவர் ரஞ்சித் சிங் ஆகியோர் திறந்து வைத்தனர்.

News October 29, 2025

தேனி விவசாயிகளே நவ.15 தான் கடைசி.!

image

தேனி மாவட்டத்தில் பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் விவசாயிகள் வரும் நவ.15ம் தேதிக்குள் நெற்பயிரை காப்பீடு செய்து கொள்ளலாம் என்று மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. தேனி மாவட்டத்தில் நெல் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் குத்தகைதாரர்கள் பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் இ சேவை மையங்கள், அரசுடைய ஆக்கப்பட்ட வங்கிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் மூலமாக காப்பீடு செய்து கொள்ளலாம்.

News October 29, 2025

திருக்கல்யாணத்தில் வைக்கப்பட்ட ஒரு தேங்காய் 2 லட்சத்திற்கு ஏலம்

image

போடி சுப்பிரமணியர் சுவாமி திருக்கோயிலில் கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று (அக்.28) திருக்கல்யாண நிகழ்வு நடைபெற்றது. ஒவ்வொரு ஆண்டும் அபிஷேகத்திற்கு வரும் ஒரு தேங்காய் ஏலம் விடுவது வழக்கம். இந்த ஆண்டு நடந்த விழாவில் திருமாங்கல்யம் வைக்கப்பட்டு அபிஷேகத்திற்கு வந்த ஒரு தேங்காய் ஏலம் விடப்பட்டது. ஏலத்தில் தேங்காயை ராஜன் என்பவர் ரூ 2 லட்சத்திற்கு ஏலம் எடுத்தார்.

error: Content is protected !!