News October 26, 2025
தேனி: போலீஸ் ஸ்டேஷன் முன்னே கொலை மிரட்டல்

தேனி சிவாஜிநகர் ஜெயசுதா 45. இவரது மருமகன் தினேஷ்பாண்டிக்கும் மகளுக்கும் கருத்து வேறுபாடு காரணமாக குடும்ப பிரச்னை ஏற்பட்டது. இது தொடர்பாக தேனி அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்திருந்தனர். புகார் தொடர்பான விசாரணைக்கு வந்த ஜெயசுதாவை, மருமகன் தினேஷ்பாண்டி, அவருடன் வந்த திவ்யா, பால்பாண்டி ஆகியோர் போலீஸ் ஸ்டேஷன் முன் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர். ஜெயசுதா புகாரில், தேனி போலீசார் விசாரிக்கின்றனர்.
Similar News
News February 11, 2026
தேனி மாவட்ட இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

தேனி மாவட்டத்தில் இன்று (10.02.2026) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேவையுள்ளவர்கள் அந்தந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம் எனவும் தெரிவித்துள்ளது.
News February 10, 2026
தேனி: இந்த கார்டு இருந்தால் மாதம் ரூ.3000

இ-ஷ்ரம் அட்டை அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான மத்திய அரசின் சமூக பாதுகாப்புத் திட்டமாகும். 16-59 வயதுக்குள் உள்ள, வருமானவரி செலுத்தாத தொழிலாளர்கள் பெறலாம். விபத்து மரணத்திற்கு ரூ.2 லட்சம், ஊனத்திற்கு ரூ.1 லட்சம் காப்பீடு கிடைக்கும். PM-SYM மூலம் 60 வயதுக்கு பின் ரூ.3,000 மாத பென்ஷன் பெறலாம். ஆதார், மொபைல் எண் வங்கி விவரங்களுடன் <
News February 10, 2026
ஆண்டிபட்டியில் போதை மாத்திரைகள் விற்ற 2 பேர் கைது!

ஆண்டிபட்டி குமாரபுரம் மயானம் அருகே சார்பு ஆய்வாளர் ரஞ்சித் தலைமையிலான போலீஸார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பைக்கில் வந்த இருவரை பிடித்து சோதித்தபோது, அவர்களிடம் 100 போதை மாத்திரைகள் (Tapentadol) இருப்பது தெரிந்தது. விசாரணையில் என்ஜிஓ நகர் அமர்தராஜ் மற்றும் பொம்மிநாயக்கன்பட்டி ராம்குமார் என்பது உறுதியானது. ஆன்லைனில் மாத்திரைகளை வாங்கி லாபத்திற்காக விற்பனை செய்த அவர்களை போலீஸார் கைது செய்தனர்


