News January 31, 2026
தேனி: பைக் மோதி இளைஞர் பரிதாப பலி

தேவதானப்பட்டி பகுதியை சேர்ந்தவர் ஜீவா (23). இவர் நேற்று முன் தினம் மாலை தேவதானப்பட்டி பகுதியில் உள்ள சாலையில் அவரது பைக்கில் சென்றுள்ளார். அப்பொழுது எதிரே வந்த மற்றொரு பைக் இவர் பைக் மீது மோதியது. இந்த விபத்தில் ஜீவா படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து தேவதானப்பட்டி போலீசார் நேற்று (ஜன.30) வழக்குப்பதிவு செய்து விசாரணை.
Similar News
News February 10, 2026
தேனி: இந்த கார்டு இருந்தால் மாதம் ரூ.3000

இ-ஷ்ரம் அட்டை அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான மத்திய அரசின் சமூக பாதுகாப்புத் திட்டமாகும். 16-59 வயதுக்குள் உள்ள, வருமானவரி செலுத்தாத தொழிலாளர்கள் பெறலாம். விபத்து மரணத்திற்கு ரூ.2 லட்சம், ஊனத்திற்கு ரூ.1 லட்சம் காப்பீடு கிடைக்கும். PM-SYM மூலம் 60 வயதுக்கு பின் ரூ.3,000 மாத பென்ஷன் பெறலாம். ஆதார், மொபைல் எண் வங்கி விவரங்களுடன் <
News February 10, 2026
ஆண்டிபட்டியில் போதை மாத்திரைகள் விற்ற 2 பேர் கைது!

ஆண்டிபட்டி குமாரபுரம் மயானம் அருகே சார்பு ஆய்வாளர் ரஞ்சித் தலைமையிலான போலீஸார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பைக்கில் வந்த இருவரை பிடித்து சோதித்தபோது, அவர்களிடம் 100 போதை மாத்திரைகள் (Tapentadol) இருப்பது தெரிந்தது. விசாரணையில் என்ஜிஓ நகர் அமர்தராஜ் மற்றும் பொம்மிநாயக்கன்பட்டி ராம்குமார் என்பது உறுதியானது. ஆன்லைனில் மாத்திரைகளை வாங்கி லாபத்திற்காக விற்பனை செய்த அவர்களை போலீஸார் கைது செய்தனர்
News February 10, 2026
தேனி பெண்களுக்கு இலவச தையல் இயந்திரம்!

தேனி வாசிகளே! பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள பெண்கள், மாற்றுத்திறனாளிகள் சுயசார்புடன் வாழ சத்யவாணி முத்து அம்மையார் நினைவாக தையல் இயந்திரங்கள் இலவசமாக வழங்கபடுகின்றன. ஆண்டு வருமானம் ரூ.72,000-க்கும் குறைவாக உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணப்பிக்க உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் அல்லது தேனி மாவட்ட சமூக நல அலுவலரை அனுகலாம் . தொடர்புக்கு 04546-254368 . SHARE பண்ணுங்க!


