News April 8, 2025

தேனி : பாண்டிய மன்னனுக்குக் கண் பார்வை தந்தக் கோயில்

image

தேனி மாவட்டம் வீரபாண்டி பகுதியில் உள்ளது கண்ணீசுவரமுடையார் கோவில். இந்த கோவிலில் உடனிருக்கும் அம்மனாக அறம்வளர்த்த நாயகி இருக்கிறார். பங்குனி உத்திரம், சிவராத்திரி பிறப்பு நாட்களில் சிறப்பு பூஜை நடைபெறும். பாண்டிய மன்னனுக்குக் கண் பார்வை தந்த இந்தக் கோயிலில் வணங்கிச் செல்பவர்களுக்கு அனைத்து நோய்களும் நீங்கி விடும் என்பதும், திருமணத்தடை நீங்கும் என்பதும் இப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது

Similar News

News April 17, 2025

தேனி அருகே கார்கள் நேருக்கு நேர் மோதல்

image

திருவண்ணாமலையிலிருந்து சபரிமலைக்கு சென்ற ஐயப்ப பக்தர்களின் காரும், சபரிமலையில் தரிசனம் முடித்து திரும்பிய தருமபுரியைச் சேர்ந்த காரும் குமுளி மலைப்பாதை வழிவிடும் முருகன் கோயில் அருகே நேருக்கு நேர் மோதியது. இதில் 2 காரில் வந்த 8 பேரும் காயமடைந்து கம்பம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்த மலைப்பாதையில் போலீசார் நிறுத்தி ஆலோசனை வழங்க மக்கள் வலியுறுத்துகின்றனர்.

News April 16, 2025

வீரபாண்டி திருவிழா நடைபெறும் நாட்கள்

image

வீரபாண்டி கௌமாரியம்மன் கோயில் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கி மே 13ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. மே 6ல் அம்மன் புறப்பாடு, மே 7ல் அம்மன் பவனி, மே 8 புஷ்ப பல்லக்கில் அம்மன் பவனி, மே 9 அம்மன் திருத்தேர் வடம் பிடித்தல், மே 10 தெற்கு ரத வீதியில் ரத உற்சவம், மே 11 மேற்கு ரத வீதியில் ரத உற்சவம், மே 12 திருத்தேர் நிலைக்கு வருதல் நிகழ்ச்சி, மே 13 ஊர் பொங்கல் நடைபெற உள்ளது. ஷேர் செய்யவும்

News April 16, 2025

ராணுவத்தில் சேர விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

image

தேனி மாவட்ட இளைஞர்கள் 2025-ம் ஆண்டுக்கான இந்திய ராணுவ அக்னிவீர் ஆட்சேர்ப்புக்கு ஏப்.10 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் இத்திட்டத்தில் விண்ணப்பிப்பதற்கான காலஅவகாசம் ஏப்.25 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க விரும்புவர்கள் இங்கே <>கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். ராணுவத்தில் சேர ஆர்வமுள்ள உங்களது நண்பர்களுக்கு ஷேர் செய்யவும்

error: Content is protected !!