News April 11, 2025
தேனி: பஸ் ஸ்டாப்பில் நின்றவர்கள் மீது கார் மோதி 7 பேர் காயம்

கம்பம் வடக்கு போலீஸ் ஸ்டேஷன் அருகில் உள்ள பஸ் நிறுத்தத்தில் நேற்று முன்தினம் இரவு பஸ் ஏறுவதற்காகப் பயணிகள் நின்றிருந்தனர். அப்போது அங்கு வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து பஸ் நிறுத்தத்தில் நின்றிருந்த பயணிகள் மீது மோதியது. இதில் மார்க்கையன்கோட்டையை சேர்ந்த பாஸ்கரன் உள்ளிட்ட 7 பேர் பலத்த காயமடைந்தனர். காரை ஒட்டி வந்த கம்பத்தைச் சேர்ந்த உதயகுமார் மகன் கிஷோர்குமார் 32 , கைது செய்யப்பட்டார்.
Similar News
News April 18, 2025
தேனி : உள்ளூரிலேயே வேலை வேண்டுமா?

தேனி மாவட்டத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 25.04.2025 அன்று காலை10 மணி முதல் 5.00 மணி வரை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலக வளாகத்தில் நடைபெறவுள்ளது. இம்முகாமில் 8 ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு , ஐ.டி.ஐ ஆகிய கல்வித் தகுதி உடையோர் கலந்து கொள்ளலாம். இம்முகாமில் கலந்து கொள்ள <
News April 18, 2025
தேனி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட விபரம்

தேனி மாவட்ட அணைகளின் இன்றைய(ஏப்.18) நீர்மட்டம்: வைகை அணை: 56.27 (71) அடி, வரத்து: 52 க.அடி, திறப்பு: 72 க.அடி, பெரியாறு அணை: 113.90 (142) அடி, வரத்து: 105 க.அடி, திறப்பு: 105 க.அடி, மஞ்சளார் அணை: 34.50 (57) அடி, வரத்து: இல்லை, திறப்பு: இல்லை, சோத்துப்பாறை அணை: 98.07 (126.28) அடி, வரத்து: 5.62 க.அடி, திறப்பு: 3 க.அடி, சண்முகா நதி அணை: 39 (52.55) அடி, வரத்து: 3 க.அடி, திறப்பு: இல்லை.
News April 18, 2025
தேனி மாவட்ட உதவி எண்கள் அறிவிப்பு

தேனி மாவட்டத்தில் உள்ள பொதுமக்களின் உதவிக்காக தொலைப்பேசி எண்கள் வெளியிடப்பட்டுள்ளன.
▶️மாவட்ட கட்டுப்பாட்டு அறை -1077
▶️மாவட்ட ஆட்சியர் அலுவலகம் – 04546 –254956
▶️காவல் -100
▶️விபத்து -108
▶️தீ தடுப்பு – 101
▶️குழந்தைகள் பாதுகாப்பு -1098
▶️மின்தடை உதவி எண் – 1912
▶️பேரிடர் கால உதவிக்கு – 1077
உங்க நண்பர்களுக்கு SHARE செய்து தெரியப்படுத்தவும். ஆபத்தில் உள்ளவர்களுக்கு இது பெரிய உதவியாக இருக்கும்.