News November 23, 2025

தேனி: நாயால் உயிரிழந்த மின் ஊழியர்

image

வடபுதுப்பட்டியை சேர்ந்த ரஞ்சித் (30) போடி மின்வாரிய அலுவலகத்தில் பணியாற்றினார். இவர் போடியில் இருந்து டூவீலரில் தேனி நோக்கி சென்றுள்ளார். தனியார் மில் அருகே சென்ற போது சாலையின் குறுக்கே நாய் சென்றதால் ரஞ்சித் திடீனெ பிரேக் பிடித்ததில் நிலை தடுமாறி கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இவ்விபத்து குறித்து பழனிசெட்டிபட்டி காவல் நிலைய போலீஸார் விசாரனை நடத்தி வருகின்றனர்.

Similar News

News January 25, 2026

தேனி: இனி கரெண்ட் பில் தொல்லை இல்லை!

image

தேனி மக்களே உங்கள் வீடுகளில் சூரிய ஒளி மின்தகடு பொருத்தினால் 300 யூனிட் வரை இலவச மின்சாரம், ரூ.78,000 வரை மானியம் பெறலாம். ஆர்வமுள்ளவர்கள் <>இங்கே கிளிக்<<>> செய்து உங்கள் மாவட்டத்தை தேர்வு செய்து, அதன் பின்னர் உங்கள் வீட்டு மின் நுகர்வு எண்,செல்போன் எண், இ-மெயில் முகவரியை பதிவு செய்ய வேண்டும். உங்களது நண்பர்களும் இதில் பயன்பெற SHARE பண்ணுங்க!

News January 25, 2026

தேனி: செல்போன் பயனாளிகளே உஷார்!

image

உங்கள் போனுக்கு வரும் அழைப்புகள் மற்றும் OTP எண்களைத் திருட சைபர் குற்றவாளிகள் ‘கால் பார்வேர்டிங்’ முறையைப் பயன்படுத்தலாம். இதைச் சரிபார்க்க உங்கள் மொபைலில் *#21# என்று டயல் செய்யுங்கள். அங்கு வேறு எண்களுக்கு ‘Forward’ ஆகிறதா என்பதை அறியலாம். அப்படித் தகவல்கள் கசிந்தால், உடனடியாக ##002# என டயல் செய்து அனைத்துப் பார்வேர்டிங் வசதிகளையும் ரத்து செய்யலாம்.

News January 25, 2026

தேனி: மரக்கிளைகளை வெட்ட முயன்றவர் பலி

image

கண்டமனூர் பகுதியை சேர்ந்தவர் முனியாண்டி (55). இவர் ஆத்தங்கரைப்பட்டி பகுதியில் உள்ள தோட்டம் ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார். தோட்டத்தில் உள்ள மரக்கிளைகளை அறுக்க முயன்ற பொழுது எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டு முனியாண்டிக்கு படுகாயம் ஏற்பட்டது. அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் நேற்று (ஜன.24) அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் இச்சம்பவம் குறித்து கண்டமனூர் போலீசார் வழக்குப்பதிவு.

error: Content is protected !!