News September 27, 2025
தேனி: நாட்டின மீன்குஞ்சுகளை இருப்பு செய்தல் பணி

தேனி மாவட்டம், வீரபாண்டியில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் இன்று சுருளியாறு மற்றும் வைகை ஆற்றில் நாட்டின மீன்களை பெருக்குவதற்கு,
பாதுகாப்பதற்கும் நாட்டின மீன்குஞ்சுகளை இருப்பு செய்தல் பணியினை மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜீத் சிங் தொடங்கிவைத்தார். இந்நிகழ்வில், வீரபாண்டி பேரூராட்சித் தலைவர் கீதாசசி, மீன்வளத்துறை உதவி இயக்குநர் சௌந்திரபாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டனர்.
Similar News
News January 5, 2026
தேனி: வீட்டில் மயங்கி விழுந்த பெண் உயிரிழப்பு..

கூடலூர் பகுதியை சேர்ந்தவர் ஜனார்த்தனி (34). இவர் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு தனது தந்தையுடன் வசித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு திடீரென ஜனார்த்தனிக்கு உடல் நிலை சரியில்லாமல் போன நிலையில், வீட்டில் மயங்கி விழுந்துள்ளார். கம்பம் மருத்துவமனையில் சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக தேனி அழைத்து சென்ற பொழுது அவர் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து கூடலூர் போலீசார் வழக்கு (ஜன.4) பதிந்துள்ளனர்.
News January 5, 2026
தேனி மக்களே கந்துவட்டி தொல்லை; இனி இல்லை..

தேனியில் கந்துவட்டி தொழில் அதிகம் நடப்பதாக புகார்கள் எழுந்துள்ளது. வட்டிக்கு பணம் வாங்குபவர் பெரும்பாலும் விவசாயிகள், சிறுவியாபாரிகள், கீழ்நிலை ஊழியர்களே இவர்களிடம் குறைந்த தொகையை கடன் கொடுத்துவிட்டு அவர்களின் நிலம், வீட்டை தங்களின் பெயர்களுக்கு மாற்றி கொண்டு அதிக வட்டியை பெறுகின்றனர். இதில் யாரேனும் சிக்கி கொண்டால் உடனே 88709 -85100, 94443- 96596 இந்த எண்களில் புகராளிக்கலாம். SHARE பண்ணுங்க
News January 5, 2026
தேனி: துணியால் கழுத்து இறுகி.. சிறுமி உயிரிழப்பு

சின்னமனூர் பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார். இவரது 8 வயது மகளான கவின்யா நேற்று (ஜன.4) அவரது தாயாரின் சால் துணியால் தூரி கட்டி விளையாடிக் கொண்டிருந்துள்ளார். திடீரென துணி சிறுமியின் கழுத்தில் இறுக்கிய நிலையில் அவர் மயக்கம் அடைந்தார். சிறுமியை மீட்டு மருத்துவமனை அழைத்துச் சென்ற நிலையில் அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து சின்னமனூர் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.


