News November 6, 2025
தேனி: நவ.8ம் தேதி நுகர்வோர் விழிப்புணர்வு முகாம்

தேனி மாவட்டம், உணவுப்பொருள் வழங்கல் சம்பந்தமான பொதுமக்கள் குறைகேட்கும் கூட்டம் மற்றும் நுகர்வோர் விழிப்புணர்வு முகாம் 08.11.2025 அன்று நடைபெற உள்ளது. மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்சித் சிங் தெரிவித்துள்ளார். பொது மக்கள் தங்கள் குறைகளை தெரிவித்து பயன் பெறலாம் என்றார்.
Similar News
News November 6, 2025
தேனி: தொழிலாளர் நல நிதி செலுத்த அறிவுறுத்தல்

தொழிலாளர் நல நிதி சட்டத்தின்படி தொழிற்சாலைகள், கடைகள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள், ஓட்டல்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு ஆண்டுதோறும் தொழிலாளர் பங்கு ரூ.20, நிறுவனத்தின் பங்கு ரூ.40 என கணக்கிட்டு செலுத்த வேண்டும். தொழிலாளர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப இந்தாண்டிற்கான தொழிலாளர் நல நிதியை 2026 ஜன.31க்குள் செலுத்த வேண்டும் என தேனி தொழிலாளர் நலத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
News November 6, 2025
தேனி: புறம்போக்கு நிலத்திற்கு பட்டா வேண்டுமா?

ஆட்சேபனை இல்லாத அரசு புறம்போக்கு நிலம், அரசு நன்செய் – புன்செய், கிராம நத்தம், உரிமையாளர் அடையாளம் காணப்படாத நிலத்தில் வசிப்போர், ஆண்டிற்கு ரூ.3 லட்சத்திற்கு கீழ் வருமானம் இருப்பின் இலவசமாக அந்த இடத்திற்கு பட்டா பெறலாம். மேற்கண்ட தகுதிகள் இருந்தால் VAO-விடம் இதற்கான விண்ணப்பத்தை அளிக்கலாம். இந்த சிறப்புத் திட்டம் டிசம்பர் 2025 வரை மட்டுமே அமலில் இருக்கும். எனவே இந்த தகவலை மறக்காம ஷேர் பண்ணுங்க!
News November 6, 2025
தேனியில் கண்காணிப்பு பணியில் 600 போலீசார்

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் சார்பில் இரண்டாம் நிலை காவலர், இரண்டாம் நிலை சிறை காவலர், தீயணைப்பு வீரர்கள் பணிக்கான எழுத்து தேர்வு நவ.9 அன்று நடைபெற உள்ளது. தேனியில் 6 மையங்களில் நடைபெறும் இத்தேர்வை 6,233 பேர் எழுதுகின்றனர். இதற்காக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சினேக பிரியா நேரடி கண்காணிப்பில் சுமார் 600 போலீசார் தேர்வு கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.


