News January 3, 2026
தேனி: நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்

தேனி மாவட்டம், பழனிசெட்டிபட்டி பழனியப்பா மேல்நிலைப்பள்ளியில் இன்று (03.01.2026) காலை 09 மணி முதல் மாலை 04 வரை நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறவுள்ளது. இந்த மருத்துவ முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு மருத்துவ பரிசோதனை மற்றும் மருத்துவர்களின் ஆலோசனையை பெறலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News January 6, 2026
தேனி: இனி EB ஆபீஸ்க்கு அலைய தேவையில்லை!

தேனி மக்களே, அதிக மின் கட்டணம், மின்தடை, மீட்டர் பழுது, மின் திருட்டு போன்ற புகார்களுக்கு இனி நேரடியாக மின்வாரிய அலுவலகம் செல்லத் தேவையில்லை. நீங்கள் உங்கள் வீட்டில் இருந்தபடியே, உங்கள் செல்போனில் இங்கே <
News January 6, 2026
தேனி: பொங்கல் பரிசு வரலையா..? உடனே CALL!

தேனி மக்களே.., பொங்கல் பரிசுடன் சேர்த்து ரூ.3000 ரொக்கத்தை வருகிற ஜன.13ஆம் தேதிக்குள் அனைவருக்கும் அளிக்க வேண்டுமென திட்டமிடப்பட்டுள்ளது. இதில், வழங்குவதில் குறைபாடு ஏற்பட்டாலோ, ஸ்டாக் இல்லை என அலுவலர்கள் பதிலளித்தாலோ, டோக்கன்களை வீடுகளுக்கே சென்று வழங்காமல் இருந்தாலோ, அல்லது தரம் குறித்த புகார்கள் இருந்தால் தயங்காமல் 1967 (அ) 1800-425-5901-ஐ அழைக்கலாம். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News January 6, 2026
தேனி: 17 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை…

பெரியகுளம் பகுதியை சேர்ந்த +2 படிக்கும் 17 வயது சிறுமி கடந்த 3 ஆண்டுகளாக அதே பகுதியில் உள்ள மாணவிகள் தங்கும் விடுதியில் படித்து வந்தார். அங்கு தங்கியிருந்த சிறுமியை பார்ப்பதற்கு அவரது உறவினர் சிவமணி யாருக்கும் தெரியாமல் அடிக்கடி சென்றுள்ளார். இருவரும் பழகி உள்ளதால் விடுதியில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுகுறித்து பெரியகுளம் மகளிர் போலீசார் சிவமணி மீது போக்சோ வழக்குப்பதிவு செய்தனர்.


