News March 21, 2026

தேனி: நடுவழியில் பெட்ரோல் காலியா.? இத பண்ணுங்க!

image

தேனி மக்களே, திடீரென உங்கள் வண்டியில் பெட்ரோல் காலியாகி நிற்பதை விட கொடுமை வேறெதுவும் இல்லை எனலாம். இந்த பிரச்னைக்கு இந்தியன் ஆயில் நிறுவனம் தீர்வு வழங்கியுள்ளது. அந்நிறுவனத்தின் <>’Fuel@Call’ <<>>என்ற ஆப்பின் மூலம், எங்கிருந்து வேண்டுமானாலும் பெட்ரோல்/டீசல் ஆர்டர் செய்யலாம். உடனே, நேரில் கொண்டுவந்து டெலிவரி பண்ணிடுவாங்க. இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

Similar News

News April 7, 2026

BREAKING போடி: ஓ பன்னீர்செல்வம் வேட்பு மனு ஏற்பு

image

தமிழகத்தில் ஏப்.,23ம் தேதி தேர்தல் நடைபெற இருப்பதால் அனைத்து கட்சியினரும் வேட்புமனு தாக்கல் செய்தனர். நேற்றுடன் வேட்புமனு தாக்கல் முடிவடைந்த நிலையில் இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்று வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் திமுக சார்பில் போடி தொகுதியில் போட்டியிட முன்னாள் முதல்வர் OPS வேட்புமனு தாக்கல் செய்த நிலையில் அவரது வேட்புமனு ஏற்கப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

News April 7, 2026

தேனி: GAS BILL-ஐ விட அதிக பணம் கேட்டால் இதை பண்ணுங்க!

image

தேனி மக்களே, உங்க வீட்டுக்கு கேஸ் சிலிண்டர் போட வருபவர் BILLவிலையை விட அதிக பணம் கேட்குறாங்களா? இனி கவலை வேண்டாம். கேஸ் ரசீதில் உள்ள விலையைவிட அதிகமாக பணம் கேட்டால் 18002333555 எண்ணுக்கு அல்லது இந்த <>இணையதளத்தில்<<>> புகாரளியுங்க. இண்டேன், பாரத்கேஸ் மற்றும் ஹெச்பி-க்கும் இந்த எண்ணில் புகாரளிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களுக்கும் தெரியபடுத்த SHARE பண்ணுங்க!

News April 7, 2026

போடி: ஓ.பி.எஸ் சொத்து மதிப்பு இவ்வளவு கோடியா?

image

முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் சமீபத்தில் திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். இதையடுத்து போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டியிடுகிறார். நேற்று அவர் மனுதாக்கல் செய்த நிலையில் தனது அசையா சொத்து மதிப்பு ரூ.9.17 கோடி என குறிப்பிட்டுள்ளார். அசையும் சொத்தாக 216 கிராம் தங்கநகை, 5 வாகனங்கள் உட்பட ரூ.2.94 கோடி இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், ரூ.5.40 கோடி கடன் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

error: Content is protected !!