News February 3, 2025
தேனி நகராட்சிக்கு அபராதம்; கோர்ட் உத்தரவு

தேனி-அல்லிநகரம் நகராட்சிக்குட்பட்ட கக்கன்ஜீ காலனியை சேர்ந்தவர் அமர்நாத். இவர் 2021ல் வீட்டு மனை ரசீது கேட்டு ரூ.300 செலுத்தி விண்ணப்பித்திருந்தார். ரசீது வழங்கவில்லை.நகராட்சிக்கு எதிராக நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். கோர்ட்டில் ரூ.40 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. ரசீது 1 மாதத்திற்குள் தரவேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
Similar News
News November 12, 2025
தேனியில் 20 பணியிடங்களுக்கு 6,324 விண்ணப்பங்கள்

தேனி: தமிழகத்தில் காலியாக உள்ள 1450 ஊராட்சி செயலாளர்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என மாநில அரசு கடந்த அக்.,ல் அறிவிப்பு வெளியிட்டது. இதன் ஒரு பகுதியாக தேனி மாவட்டத்தில் 20 ஊராட்சி செயலாளர்கள் பணியிடங்கள் நிரப்ப அறிவிக்கப்பட்டிருந்தது. இப்பணியிடங்களுக்கு 6324 பேர் விண்ணப்பித்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சராசரியாக ஒரு பணியிடத்திற்கு 316 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
News November 12, 2025
தேனி: வாக்காளர் பெயர் சேர்க்க முக்கிய அறிவிப்பு!

தேனி மக்களே, வாக்காளர் படிவத் திருத்தங்களுக்காக வீடு வீடாக SIR படிவம் உங்க பகுதில வழங்கும் போது நீங்க வீட்ல இல்லையா? உங்க ஓட்டு பறிபோயிடும்ன்னு கவலையா? அதற்கு ஒரு வழி இருக்கு. இங்கு <
News November 12, 2025
தேனி: மனைவியை துன்புறுத்திய கணவர் மீது வழக்கு

போடி அருகே சிலமலை பகுதியை சேர்ந்தவர் அருள்கனி (22). இவரது கணவர் காளிமுத்து (28). இந்த தம்பதியருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் காளிமுத்து தினமும் மது அருந்திவிட்டு, குடும்ப செலவிற்கு பணம் தராமல் மனைவி, குழந்தைகளை அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். இது குறித்து அருள்கனி அளித்த புகாரில் போடி அனைத்து மகளிர் போலீசார் காளிமுத்து மீது நேற்று (நவ.11) வழக்கு பதிவு செய்துள்ளனர்.


