News November 15, 2024

தேனி தொழிலாளர் நல வாரிய சிறப்பு முகாம் – ஆட்சியர்

image

தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் ஷஜீவனா உத்தரவின் பேரில், தொழிலாளர் உதவி ஆணையர் மனுஜா ஷியாம் ஷங்கர் வெளியிட்டுள்ள செய்தியில்:- தம்மிநாயக்கன்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் தொழிலாளர் நல வாரியத்தில் புதிய உறுப்பினர் பதிவு சிறப்பு முகாம் நாளை நடைபெறுகிறது. அனைத்து தொழில் அமைப்பில் வேலைசெய்கின்றவர்கள் முகாமில் கலந்து கொள்ளலாம் என்றார்.

Similar News

News March 2, 2026

தேனி: தளபதி படத்தை வைப்பதில் தவறில்லை – ஓபிஎஸ்

image

முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்த பின் பெரியகுளத்தில் உள்ள தனது வீட்டின் கேட்டில் இருந்த இரட்டை இலை சின்னம், கட்சிக்கொடிகள் ஆகியவற்றை அகற்றினர். இந்நிலையில் காரில் ஜெயலலிதா படத்தை நீக்கியது குறித்து மதுரையில் செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு தற்போது திமுகவில் இணைந்துள்ளதால் தளபதி படத்தை வைப்பதில் எந்த தவறும் இல்லை என தெரிவித்தார். உங்கள் கருத்து என்ன மக்களே?

News March 2, 2026

தேனி: திருட்டு வழக்கில் தம்பதி உட்பட 4 பேர் கைது

image

புதுப்பட்டி பகுதியை சேர்ந்த ஆஷிக் வீட்டில் நேற்று முன் தினம் 50 பவுன் நகை திருடு போனது. இதுகுறித்து உத்தமபாளையம் போலீசார் வழக்குப்பதிந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். விசாரணையில் ஆஷிக் வீட்டின் அருகே வசித்து வரும் ஆட்டோ ஓட்டுனரான ஓலி, அவரது நண்பர் சின்னன், இவர்களுக்கு உதவிய ஓலி அத்தா மனைவி ஆபிதா, இவரது உறவினர் சர்மிலா பானு ஆகியோர் திருடியது தெரிய வந்தது. போலீசார் 4 பேரையும் கைது செய்தனர்.

News March 2, 2026

தேனி: ஆற்றில் மூழ்கிய சிறுவன்

image

சின்னமனூர் பகுதியை சோ்ந்த ராஜா என்பவரது மகன் நாகமுருகன். இவர் தனது நண்பா்களுடன் முல்லை பெரியாற்றில் குளிக்கச் சென்றுள்ளார். அப்போது குளித்துக் கொண்டிருந்த சிறுவன் திடீரென நீரில் மூழ்கினார். இதுகுறித்து தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் சிறுவனை தேடும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் நேற்றிரவு வரை சிறுவன் கிடைக்கவில்லை. தொடர்ந்து சிறுவனை தேடும் பணி நடைபெற்று வருகிறது.

error: Content is protected !!