News January 31, 2025
தேனி: தொழிலாளர்களுக்கு நிவாரணம் அறிவிப்பு

தேனி மாவட்டத்தில் தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்த அமைப்பு சாரா தொழிலாளர்களில் யாரேனும் 2022 மார்ச் 31 வரை விபத்துக்களால் ஊனம், மரணம் அடைந்திருந்தால் நிவாரணம் வழங்கப்பட உள்ளது. ஊனம் அடைந்தவர்கள், மரணமடைந்தவர்களின் வாரிசுகள் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு 04545-250853 எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தேனி தொழிலாளர் அமலாக்கப் பிரிவு உதவி ஆணையர் தெரிவித்துள்ளார்.
Similar News
News March 2, 2026
தேனி: ஆற்றில் மூழ்கிய சிறுவன்

சின்னமனூர் பகுதியை சோ்ந்த ராஜா என்பவரது மகன் நாகமுருகன். இவர் தனது நண்பா்களுடன் முல்லை பெரியாற்றில் குளிக்கச் சென்றுள்ளார். அப்போது குளித்துக் கொண்டிருந்த சிறுவன் திடீரென நீரில் மூழ்கினார். இதுகுறித்து தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் சிறுவனை தேடும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் நேற்றிரவு வரை சிறுவன் கிடைக்கவில்லை. தொடர்ந்து சிறுவனை தேடும் பணி நடைபெற்று வருகிறது.
News March 1, 2026
தேனி மாவட்ட இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

தேனி மாவட்டத்தில் இன்று 01.03.2026 இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேவையுள்ளவர்கள் அந்தந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம் எனவும் தெரிவித்துள்ளது.
News March 1, 2026
தேனி: இனி EB ஆபீஸ் போகத் தேவையில்லை!

தேனி மக்களே, அதிக மின் கட்டணம், மின்தடை, மீட்டர் பழுது, மின் திருட்டு போன்ற புகார்களுக்கு இனி நேரடியாக மின்வாரிய அலுவலகம் செல்லத் தேவையில்லை. நீங்கள் உங்கள் வீட்டில் இருந்தபடியே, உங்கள் செல்போனில் இங்கே <


