News November 24, 2025
தேனி: திருவிழாவில் கலவரத்தை ஏற்படுத்தியவர்கள் கைது

பெரியகுளம் அருகே தாமரைக்குளம் செல்லாண்டியம்மன் கோயிலில் அக்.6ல் திருவிழா நடந்தது. சுவாமி ஊர்வலத்தில் நடந்த கல்வீச்சு தகராறில் பாதுகாப்பு பணியிலிருந்த சிறப்பு காவல்படை போலீஸ்காரர் யுவராஜாவுக்கு 25, தலையில் காயம் ஏற்பட்டது.கலவரத்தில் ஈடுபட்டவர்களை தனிப்படை அமைத்து போலீசார் தேடி வந்தனர். இதில் தாமரைக்குளம் அம்பேத்கர் தெரு ராஜேஷ் 25, ராம்ஜி 27, சவுந்திரபாண்டி 32 உள்ளிட்ட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
Similar News
News November 24, 2025
தேனி: விபத்து வாகனத்தில் மோதி ஒருவர் பரிதாப பலி

தேவதானப்பட்டி- வத்தலக்குண்டு சாலை ஜி.மீனாட்சிபுரம் அருகே நேற்று முன் தினம் இரவு அடுத்தடுத்து மூன்று வாகனங்கள் விபத்தில் சிக்கியது. தேவதானப்பட்டி போலீசார் வாகனங்களை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வத்தலகுண்டு நோக்கிச் சென்ற டூவீலர் ஒன்று விபத்து வாகனங்களில் மோதியது. இதில் பெரியகுளத்தை சேர்ந்த சசிக்குமார் (26) என்பவர் சம்பவ இடத்திலேயே பலியானார். போலீசார் விசாரிகின்றனர்.
News November 24, 2025
தேனி: உங்க ரேஷன் கார்டை உடனே CHECK பண்ணுங்க…

தமிழ்நாட்டில் ரேஷன் அட்டைகள் AAY, PHH, NPHH-S, NPHH என நான்கு வகையில் உள்ளது.
AAY : இலவச அரிசி (35 கிலோ), சர்க்கரை, கோதுமை, மண்னெண்ணெய்.
PHH: இலவச அரிசி, சர்க்கரை, கோதுமை, மண்னெண்ணெய்.
NPHH-S: அரிசி சிலருக்கு இலவசம்.
NPHH: சில பொருட்கள் மட்டும்.
உங்க ரேஷன் அட்டைகள் மாற்றம் செய்ய இங்கு <
News November 23, 2025
தமிழக அரசுக்கு போடி MLA ஒபிஎஸ் கோரிக்கை

கொரோனா காலத்தில் உயிரிழந்த அரசு ஊழியர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்க வேண்டும் என திமுக அரசை தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் சட்டமன்ற உறுப்பினர் ஓ.பன்னீர் செல்வம் இன்று 23.11.2025 தனது அறிக்கையில் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் இதில் முதலமைச்சர் தனி கவனம் செலுத்தி உடனடியாக தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.


