News February 27, 2026
தேனி: திமுகவில் இணைகிறாரா ஓபிஎஸ்?

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் தமிழக முதலமைச்சராக இருந்த ஓபிஎஸ், இன்று தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு இன்னும் சற்றுநேரத்தில் திமுகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மீண்டும் அதிமுகவில் இணைக்க மாட்டேன் என EPS மறுத்துவிட்டார். தவெக பக்கம் செல்லவும் OPS-க்கு விருப்பம் இல்லாததால் எதிர்கால தனது அரசியல் பயணம் கருதி இம்முடிவை எடுக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
Similar News
News February 28, 2026
போடியில் கீழே விழுந்து ஒருவர் உயிரிழப்பு

தேனி மாவட்டம், போடி பகுதியை சேர்ந்தவர் ரூபன் (42). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பாக மீனாட்சிபுரம் பகுதியில் உள்ள கண்மாய் கரையில் குடிபோதையில் கீழே விழுந்துள்ளார். அதில் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்து வந்த ரூபன் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போடி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு.
News February 28, 2026
தேனி மாவட்ட இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

தேனி மாவட்டத்தில் இன்று 27.02.2026 இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேவையுள்ளவர்கள் அந்தந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம் எனவும் தெரிவித்துள்ளது.