News November 3, 2025
தேனி: தாய் இறந்த சோகத்தில் இளைஞர் தற்கொலை

கடமலைக்குண்டு அருகே கரட்டுப்பட்டியை சேர்ந்தவர் குமரன் (16). இவரது தாயார் ஜெயா கடந்த சில வருடங்களுக்கு முன்பு உயிரிழந்த நிலையில் அன்று முதல் குமரன் மனவருத்தத்தில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு தூங்கச் சென்ற குமரன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து கடமலைக்குண்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Similar News
News November 3, 2025
தேனி: TNHB -ன் அடுக்குமாடி சொந்த வீடு APPLY!

தேனி மக்களே, TNHB திட்டம் மூலம் மக்களுக்கு மானிய விலையில் சொந்த வீடு வாங்கும் கனவை அரசு நிறைவேற்றி வருகிறது. உங்க மாவட்டத்திலே சொந்த வீடு வேணுமா? 21 வயது நிரம்பி, எந்த சொத்தும் இல்லாதவர்களாக இருக்க வேண்டும். சம்பளம்: 25,000 – 70,000 வரை பெறுபவர்கள் இங்கு <
News November 3, 2025
தேனி: ரூ.10,000 அபராதம் விதித்த வனத்துறை

கம்பமெட்டு சோதனை சாவடியில் வனத்துறையினர் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது அவ்வழியாக வந்த கேரளா எண் கொண்ட காரை சோதனை செய்த போது காரின் டிக்கியில் கம்பமெட்டு வனப்பகுதியில் கொட்டுவதற்காக ரெக்சின் கழிவுகளை எடுத்து வந்திருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து காரின் உரிமையாளர் சோலைராஜாவிற்கு வனத்துறையினர் ரூ.10,000 அபராதம் விதித்து அவரை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
News November 3, 2025
இன்று மக்கள் குறை தீர்க்கும் கூட்டம்

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள அலுவலக வளாகத்தில் மாவட்ட ஆட்சியர் ரஞ்சீத்சிங் தலைமையில் காலை 10.30 மணிக்கு மக்கள் குறைத்தீர்க்கும் கூட்டம் நடக்கிறது. இந்நிகழ்ச்சியில் அரசு துறை அதிகாரிகள். அலுவலர்கள் கலந்து கொள்கிறார்கள். பொதுமக்கள் தங்கள் குறைகளை மனு மூலமாகவோ அல்லது நேரிலோ தெரிவிக்கலாம் என ஆட்சித் தலைவர் தெரிவித்தார்.


