News April 22, 2025

தேனி : தாய்க்கு மகன் கட்டிய கோவில்

image

தேனி மாவட்டம் சுருளிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஜெகந்த் மருத்துவராக பணியாற்றி வருகிறார். இவரது தாயார் ஜெயமீனா கடந்த 10 வருடங்களுக்கு முன்பு புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். தனது தாயின் மீது கொண்டுள்ள அன்பின் காரணமாக சுருளி அருவியில் 85 அடி உயரத்தில் ஜெயமீனா என்ற பெயரில் கோவிலை கட்டி உள்ளார் .தாய்க்காக மகன் கட்டிய கோவிலை காண பலரும் சென்று வருகின்றனர்.

Similar News

News April 22, 2025

தேனி : தென்னையில் அதிக மகசூல் பெற அரிய வாய்ப்பு

image

தமிழக அரசின் தோட்டக்கலை மலைப்பயிர்கள் துறை சார்பாக தேனி மாவட்ட அளவிலான தென்னை சாகுபடி கருத்தரங்கம் நடக்க உள்ளது. இதில் தென்னை சாகுபடிபற்றியும், சாகுபடி முறை, மகசூல் வழிமுறை பற்றி விளக்கம் அளிக்கப்படும். தேனியில் உள்ள மாடர்ன் மஹால் காலை 10 மணி முதல் மாலை வரை 22.04.2025 , 23.04.2025 ஆகிய 2 தினங்கள் நடைபெற உள்ளது. தேனி மாவட்டத்தை சேர்ந்த பிற விவசாயிகளுக்கும், நண்பர்களுக்கும் ஷேர் செய்யவும்.

News April 22, 2025

தேனியில் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்

image

தேனி மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் ஏப்.25 நடைபெற உள்ளது. 10-ஆம் வகுப்பு தேர்ச்சி முதல் PG படித்தவர்கள் வரை பங்கேற்கலாம். இந்த <>லிங்கில் <<>>தங்களது விவரங்களை பதிய வேணடும். விரும்புவோர் ஏப்.25ம் தேதி காலை 10 மணிக்கு தேனி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரில் அனுகலாம்.விவரங்களுக்கு76959 73923.தொடர்பு கொள்ளலாம். வேலை தேடுவோருக்கு SHARE செய்து உதவவும்.

News April 22, 2025

சிறுமி கர்ப்பம்: நால்வர் மீது போக்சோ வழக்கு

image

வருஷநாடு பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் அப்பகுதியைச் சேர்ந்த செல்வம் என்பவருக்கும் 2023ல் திருமணம் முடிந்தது.தற்போது சிறுமி கர்ப்பமாக உள்ளார். இதுகுறித்த ஊராட்சி ஒன்றிய விரிவாக்க அலுவலர் மலர்கொடி விசாரணை நடத்தினார். அவர் அளித்த புகாரில் சிறுமியின கணவர், அவரது தந்தை, தாய், சிறுமியின் தந்தை ஆகியோர் மீது போக்சோ சட்டப்பிரிவில் வருஷநாடு போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!