News December 14, 2025

தேனி: டூவிலரில் சென்றவர் கீழே விழுந்து பலி!

image

வேப்பம்பட்டியை சேர்ந்த தம்பதி முருகன், வேணி இருவரும் டூவிலரில் சின்னமனூர் வாரச்சந்தையில் காய்கறி வாங்கி கொண்டு வீடு திரும்பியுள்ளனர். வேப்பம்பட்டி ரோட்டில் வேகமாக சென்றபோது டூவிலர் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்ததில் முருகன் பலத்த காயமடைந்தார். சிகிச்சைக்காக GHல் அனுமதிக்கப்பட்ட நிலையில் மேல்சிகிச்சைக்காக பெரியகுளம் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Similar News

News March 5, 2026

தேனி: பட்டா மாற்றுவது இனி ரொம்ப EASY..

image

தேனியில் சொந்தமாக வீடு அல்லது வீட்டு மனை வாங்குபவர்கள் அதற்கான பட்டாவில் பெயர் மாற்றம் செய்வது அவசியம். முன்பெல்லாம் பட்டா வாங்க வட்டாச்சியர் அலுவலகத்திற்கு நேரில் செல்ல வேண்டியது இருந்தது. ஆனால், தற்போது ஆன்லைனில் வந்துவிட்டது இந்த<> லிங்க்<<>> மூலம் செயலியில் போன் நம்பர், வீட்டு முகவரி போன்ற விவரங்களை பதிவிட்டு LOGIN செய்யவேண்டும். ஒரு வாரத்தில் பட்டா ரெடியாகும்.தகவலை SHARE பண்ணி உதவுங்க.

News March 5, 2026

தேனி: பைக் மீது ஆட்டோ மோதியதில் ஒருவர் பலி.!

image

தேனி கோபாலபுரம் பகுதியை சேர்ந்தவர் வேல்ராஜ் (26). இவர் நேற்று முன்தினம் அவரது நண்பருடன் பைக்கில் சென்றுள்ளார். கொடுவிலார்பட்டி சாலையில் பைக் சென்று கொண்டிருந்தபோது, அந்த வழியாக வந்த ஆட்டோ ஒன்று இவர்களது பைக் மீது மோதியுள்ளது. இந்த விபத்தில் படுகாயமடைந்த வேல்ராஜ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விபத்து குறித்து பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்கு (மார்.4) பதிந்துள்ளனர்.

News March 5, 2026

தேனி: கீழே விழுந்து வக்கீல் உயிரிழப்பு.!

image

கூடலூர் பகுதியை சேர்ந்தவர் அண்ணாதுரை (57). வழக்கறிஞரான இவரது மகளுக்கு கடந்த பிப்.22.ம் தேதி திருமணம் நடைபெற்றது. அன்று இரவு நண்பர்களுக்கு பார்ட்டி கொடுக்க வெளியே சென்றவர் மது போதையில் கீழே விழுந்து படுகாயம் அடைந்துள்ளார். அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் நேற்று முன்தினம் (மார்.3) அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து குமுளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை.

error: Content is protected !!