News January 24, 2026
தேனி: டிராக்டர் மோதி இளைஞர் பரிதாப பலி

தேனி, அன்னஞ்சி விளக்கு முதல் வீரபாண்டி வரை செல்லும் புறவழிச் சாலையில் வீரப்ப அய்யனார் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு செல்லும் சாலையில் நேற்று பெரியகுளத்தில் இருந்து தேனி நோக்கி சென்ற டிராக்டர், தேவதானப்பட்டிக்கு பைக்கில் சென்ற சந்துரு (20) மீது நேருக்கு நேர் மோதியது. இதில் சந்துரு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். உடனே அக்கம்பக்கத்தினர் அவரை ஆம்புலன்ஸ் மூலம் தேனி GH-க்கு அனுப்பி வைத்தனர்.
Similar News
News January 25, 2026
தேனி: NO EXAM.. NAVY-ல் ரூ.1,25,000 சம்பளத்தில் வேலை

இந்திய கப்பல் படையில் காலியாக உள்ள 260 பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியது. B.E/B.Tech, B.Sc, B.Com படித்தவர்கள், திருமணமாகாத ஆண், பெண் இருபாலரும் பிப். 24க்குள் விண்ணப்பிக்கலாம். இதற்கு சம்பளம் ரூ.1,25,000 வழங்கப்படும். தேர்வு இல்லை. நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியான நபர்கள் நியமனம் செய்யப்படுவர். மேலும் விபரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <
News January 25, 2026
தேனி: இளைஞர்கள் மீது தாக்குதல்

கூடலூர் பகுதியை சேர்ந்தவர் நவீன் குமார் (26). இவரது நண்பரான விருமாண்டி (28) என்பவருக்கும், அதே பகுதியை சேர்ந்த அபினேஷ் (24) என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்த முன்விரோதம் காரணமாக நேற்று முன் தினம் அபினேஷ் உள்ளிட்ட நான்கு பேர் நவீன்குமார் மற்றும் விருமாண்டியை கடுமையாக தாக்கியுள்ளனர். இதுகுறித்த புகாரில் கூடலூர் தெற்கு போலீசார் அபினேஷை நேற்று கைது செய்தனர்.
News January 25, 2026
தேனி: போடி அருகே ஒருவர் மீது தாக்குதல்

போடி அருகே பெருமாள்கவுண்டன்பட்டியை சேர்ந்தவர் கார்த்திக். இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த ஆசைத்தம்பி என்பவருக்கும் நிலம் வாங்குவது தொடர்பாக முன் விரோதம் இருந்தது. இந்த முன் விரோதத்தின் காரணமாக ஆசைத்தம்பி தூண்டுதலின் பேரில் கருத்தப்பாண்டி உள்ளிட்ட ஆறு பேர் கார்த்திக்கை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதுகுறித்த புகாரில் போடி தாலுகா போலீசார் கருத்தபாண்டியை கைது செய்து மற்றவர்களை தேடி வருகின்றனர்.


