News December 26, 2025

தேனி: டிகிரி போதும்., கூட்டுறவு வங்கியில் ரூ.96,210 சம்பளம்!

image

தேனி மக்களே, தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கியில் காலியாக உள்ள 50 உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளன. 18 – 32 வயதுகுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி, B.E/B.Tech முடித்தவர்கள் டிச.31க்குள் தகுதியுடைய நபர்கள் இங்கு <>க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். இதற்கு சம்பளம் ரூ.32,020 – ரூ.96,210 வரை வழங்கப்படும். எழுத்துத் தேர்வு அடிப்படையில் நியமனம் செய்யப்படுவர். இந்த தகவலை SHARE செய்யுங்க..

Similar News

News January 1, 2026

போடி அருகே மனைவி, மாமியாரை தாக்கிய கணவர்

image

போடி அருகே மணியம்பட்டியை சேர்ந்தவர் திவ்யா (28). இவரது கணவர் நாராயணன் (35). இவர் மது பழக்கத்திற்கு அடிமையாகி மனைவி மீது சந்தேகப்பட்டு அவரை அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். இதனால் திவ்யா கோபித்துக் கொண்டு அவரது தாயார் வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் நேற்று (டிச.31) மாமியார் வீட்டுக்கு சென்ற நாராயணன் மனைவி மற்றும் மாமியாரை தாக்கி உள்ளார். போடி தாலுகா போலீசார் நாராயணனை கைது செய்தனர்.

News January 1, 2026

தேனி: சட்டக் கல்லுாரி மாணவர் மீது தாக்குதல்

image

பழனிசெட்டிபட்டியை சேர்ந்தவர் கபிலன் (20). இவர் தேனி அரசு சட்டக்கல்லூரியில் 3.ம் ஆண்டு படித்து வருகிறார். இவருக்கும் இவருடன் படிக்கும் வசந்தகுமார் என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இதன் காரணமாக வசந்தகுமார் அவரது நண்பர்கள் விக்னேஷ்வரன், சரண், செந்தில்குமார் ஆகியோர் சேர்ந்து கபிலனை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். பழனிசெட்டிபட்டி போலீசார் 4 பேர் மீதும் வழக்கு (டிச.31) பதிவு.

News January 1, 2026

தேனி: ரேஷன் கடைக்கு போறீங்களா? இத பண்ணுங்க!

image

தேனி மக்களே ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை இனி வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம் உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். மேலும் புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். தெரிந்தவர்களுக்கு மறக்காம SHARE பண்ணுங்க

error: Content is protected !!