News December 5, 2025
தேனி: சுகாதாரத் துறையில் ரூ.40,000 சம்பளத்தில் வேலை!

தேனி மாவட்ட சுகாதாரத்துறையின் கீழ் பல்வேறு பணிகளுக்கு 19 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 8th முதல் மருத்துவம் சார்ந்த படிப்புகள் படித்த 18 -50 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். பல்வேறு பதவிகளுக்கு தகுதிகேற்ப ரூ.40,000 வரை சம்பளம் வழங்கப்படும். ஆர்வம் உள்ளவர்கள்<
Similar News
News December 6, 2025
தேனி: அரசு பேருந்து ஏறி இறங்கியதில் முதியவர் உயிரிழப்பு

தேனியை சேர்ந்தவர் விஜயன் (63). இவர் நேற்று (டிச.5) ஆண்டிபட்டியில் நடந்த துக்க நிகழ்வில் கலந்து விட்டு அரசு பேருந்தில் தேனி வந்துள்ளார். தேனி புதிய பேருந்து நிலையம் அருகே விஜயன் பேருந்தில் இருந்து இறங்கிய போது எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டு பேருந்தின் சக்கரம் அவர் மீது ஏறி இறங்கியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த அவர் மருத்துவமனையில் உயிரிழந்தார். விபத்து குறித்து தேனி போலீசார் வழக்கு பதிவு.
News December 6, 2025
தேனி: கம்மியான விலையில் கார், பைக் வேண்டுமா?

தமிழகம் முழுவதும் உள்ள போதை பொருள் நுண்ணறிவு பிரிவு அலுவலகங்களில் போதை பொருள் கடத்தலில் கைப்பற்றப்பட்ட வழக்குளில் பறிமுதல் செய்யப்பட்ட 30 டூவீலர்கள், 2 மூன்று சக்கரம், 30 நான்கு சக்கர வாகனம், 4 லாரிகள் மற்றும் 6 படகுகள் மொத்தம் 72 வாகனங்கள், 22, 23ம் தேதியில் ஏலம் விடப்பட உள்ளன. ஏலம் எடுக்க விரும்பும் தேனி மாவட்டத்தை சேர்ந்தோர் 9788924045 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். இந்த தகவலை SHARE IT.
News December 6, 2025
தேனி: தந்தையை அரிவாளால் வெட்டிய மகன்

பெரியகுளம் அருகே மேல்மங்கலம் மேலத் தெருவை சார்ந்தவர் காசிநாதன். 3 ஆண்டுகளுக்கு முன் போலீஸ் பணியில் இருந்து விருப்ப ஓய்வில் வந்து பெரியகுளம் பாலசுப்பிரமணியர் கோவிலில் சிவனடியராக உள்ளார். இவரது நண்பர் அண்ணாத்துரை. காசிநாதனை வீட்டிற்கு சாப்பாட்டுக்கு அழைத்து சென்ற போது அண்ணாத்துரை மகன் முகிலன் யாசகரை ஏன் அழைத்து வந்தாய் என தகப்பனாரையும், யாசகரையும் அரிவாளால் வெட்டினார். தென்கரை போலீசார் வழக்கு பதிவு.


