News December 28, 2025
தேனி: சிறுமி கர்ப்பம் – இளைஞர் மீது போக்சோ

பெரியகுளம் ஒன்றியம், எண்டப்புளி பகுதியை சேர்ந்தவர் அரவிந்தன் (24). இவர் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 18 வயது பூர்த்தியடையாத சிறுமியை வீட்டில் வைத்து மே மாதம் திருமணம் செய்தார். தற்போது சிறுமி 5 மாத கர்ப்பமாக உள்ளார். இதுகுறித்து பெரியகுளம் ஒன்றிய விரிவாக்க அலுவலர் அளித்த புகாரில் பெரியகுளம் அனைத்து மகளிர் போலீசார் அரவிந்தன் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News December 28, 2025
தேனி: இலவச சுயத்தொழில் பயிற்சி..!

தேனி, கருவேல்நாயக்கன்பட்டியில் உள்ள கனரா வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தில் நாளை (டிச.29) முதல் இலவச மிஷின் ஆரி மற்றும் சார்தோஷி எம்ப்ராய்டரி பயிற்சி நடைபெற உள்ளது. இந்த பயிற்சியில் சேர விருப்பமுள்ளவர்கள் டிச.29ம் தேதிக்குள் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும் என பயிற்சி மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தகவலுக்கு 8870376796 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். SHARE IT
News December 28, 2025
வங்கி வைப்புத் தொகை தீர்வு முகாம்- கலெக்டர் அறிவிப்பு

தேனி மாவட்ட நிர்வாகம் மற்றும் முன்னோடி வங்கி சார்பில் இந்திய அரசின் நிதி சேவைகள் துறையின் மூலம் தொடங்கப்பட்டுள்ள “உங்கள் பணம், உங்கள் உரிமை” திட்டத்தின் ஒரு பகுதியாக வைப்புதாரர் கல்வி மற்றும் விழிப்புணர்வு நிதி குறித்த முகாம் டிச.30 ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற உள்ளது. எனவே பொதுமக்கள் இம்முகாமில் கலந்து கொண்டு பயனடையுமாறு
மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்.
News December 28, 2025
தேனி மக்களே இந்த எண்கள் ரொம்ப முக்கியம் SAVE IT..!

அவசர கால உதவி எண்கள்:
மனித உரிமைகள் ஆணையம் – 22410377
போக்குவரத்து அத்துமீறல் – 9383337639
போலீஸ் மீது ஊழல் புகார் எஸ்.எம்.எஸ் அனுப்ப – 9840983832
குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
முதியோருக்கான அவசர உதவி -1253
தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
கடலோர பகுதியில் அவசர உதவி-1093
ரத்த வங்கி – 1910
கண் வங்கி -1919
விலங்குகள் பாதுகாப்பு- 044-22354989
இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க.


