News March 6, 2026

தேனி: சிங்கப்பூரில் இருந்து வந்தவர் தற்கொலை.!

image

ஆண்டிபட்டியை சேர்ந்தவர் கணேசன் (37). இவர் பல வருடங்களாக சிங்கப்பூரில் வேலை பார்த்து வந்த நிலையில் கடந்த சில மாதங்களாக அவரது சொந்த ஊரில் தங்கி உள்ளார். இங்கு சரியான வேலை இல்லாமலும் போதிய வருமானம் இல்லாமலும் கணேசன் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். மன உளைச்சல் காரணமாக நேற்று முன்தினம் கணேசன் அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ஆண்டிபட்டி போலீசார் வழக்கு பதிவு.

Similar News

News March 10, 2026

தேனியில் தவெக சார்பில் தேர்தல் பிரச்சாரம்

image

தேனி மாவட்டம், உத்தமபாளையம் பகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தேர்தல் வாக்குறுதிகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் பேரூர் மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு வீடு வீடாக சென்று பொதுமக்களை சந்தித்து துண்டு பிரசுரங்களை வழங்கினர். இதில் கட்சி நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

News March 10, 2026

தேனியில் மூதாட்டி உடல் கருகி பலி

image

தேனி வாழையாத்துப்பட்டியை சேர்ந்தவர் நாகரத்தினம் (72). இவர் அப்பகுதியில் உள்ள அம்மன் கோவிலில் தினந்தோறும் விளக்கு ஏற்றி வழிபடுவது வழக்கம். 2 தினங்களுக்கு முன்பு விளக்கேற்றிய பொழுது எதிர்பாராத விதமாக அவரது சேலையில் தீப்பற்றியது. இதில் படுகாயம் அடைந்த நாகரத்தினம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று (மார்.9) உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்த போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

News March 10, 2026

தேனி: எலி மருந்து குடித்து பெண் தற்கொலை

image

பெரியகுளம் பகுதியை சேர்ந்தவர் ராமலட்சுமி (50). இவருக்கு சில வருடங்களாக தீராத வயிற்று வலி இருந்து வந்துள்ளது. வலியின் வேதனை காரணமாக சில தினங்களுக்கு முன்பு எலி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் நேற்று முன்தினம் (மார்ச்.8) அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து பெரியகுளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!