News January 2, 2026
தேனி: சாலை விபத்தில் முதியவர் பலி

கோட்டூர் பகுதியை சேர்ந்தவர் சுருளி (78). இவர் நேற்று (டிச.31) மாலை திண்டுக்கல்-குமுளி சாலையில் ஓரமாக நடந்து சென்று கொண்டிருந்துள்ளார். அப்பொழுது இவருக்கு பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதியது. இந்த விபத்தில் சுருளி படுகாயம் அடைந்த நிலையில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து வீரபாண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News January 6, 2026
தேனி: ரோடு சரியில்லையா? இதில் புகார் தெரிவிங்க..

தேனி மக்களே உங்க பகுதியில் உள்ள சாலைகளில் பள்ளமாகவும், பராமரிப்பு இன்றியும் இருக்கிறதா? யாரிடம் புகார் கொடுப்பது என்று தெரியவில்லையா? அப்ப இத பண்ணுங்க. அந்த சாலையைப் புகைப்படம் எடுத்து “<
News January 6, 2026
தேனி: விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை…!

கோடாங்கிப்பட்டி பகுதியை சோ்ந்தவா் ஜீவா (50). கூலித் தொழிலாளி. இவரது பெண் நண்பா் ராமேஸ்வரி வீட்டிற்கு நேற்று ஜீவா சென்றுள்ளார். அப்போது அவா் அங்கு விஷம் குடித்து மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. உடனே அவரை மீட்டு GH-ல் அனுமதித்தனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே உயிரிழந்ததாக தெரிவித்தனா். இதுகுறித்து ஜீவாவின் மனைவி அளித்த புகாரின் பேரில் தென்கரை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை.
News January 6, 2026
தேனி: கார்-பைக் மோதல்; டிரைவர் பலி..

போடி, கன்னிசேர்வைபட்டியை சேர்ந்தவர் சுரேஷ். தனியார் பஸ் டிரைவர். இவர் நாகலாபுரம் விலக்கு பகுதியில் தனது பைக்கில் சென்றார். அப்போது சாலையை கடக்க முயன்ற போது எதிரே வந்த கார் இவரது பைக் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த சுரேஷ்-யை சிகிச்சைக்காக GH-ல் சேர்த்தனர். ஆனால் அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து போடி தாலுகா போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை.


