News January 1, 2026
தேனி: சட்டக் கல்லுாரி மாணவர் மீது தாக்குதல்

பழனிசெட்டிபட்டியை சேர்ந்தவர் கபிலன் (20). இவர் தேனி அரசு சட்டக்கல்லூரியில் 3.ம் ஆண்டு படித்து வருகிறார். இவருக்கும் இவருடன் படிக்கும் வசந்தகுமார் என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இதன் காரணமாக வசந்தகுமார் அவரது நண்பர்கள் விக்னேஷ்வரன், சரண், செந்தில்குமார் ஆகியோர் சேர்ந்து கபிலனை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். பழனிசெட்டிபட்டி போலீசார் 4 பேர் மீதும் வழக்கு (டிச.31) பதிவு.
Similar News
News January 2, 2026
தேனி: ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட பெண்… சடலம் மீட்பு

கூடலுார் அருகே உள்ள முல்லைப்பெரியாற்றில் நேற்று முன்தினம் புல் அறுக்க சென்ற சங்கர் அவரது மனைவி கணேஸ்வரி ஆகியோர் ஆற்றில் அடித்து செல்லப்பட்டனர். லோயர்கேம்ப் போலீசார், கம்பம் தீயணைப்புத் துறையினர் மாயமான இருவரையும் தேடினர். 2வது நாளாக நேற்று முன்தினம் (டிச.31) நடைபெற்ற தேடுதல் பணியில் கணேஸ்வரியின் உடல் மீட்கப்பட்டது. சங்கர் உடல் கிடைக்காததால் தேடுதல் பணி தொடர்ந்து நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News January 2, 2026
தேனி: சாலை விபத்தில் முதியவர் பலி

கோட்டூர் பகுதியை சேர்ந்தவர் சுருளி (78). இவர் நேற்று (டிச.31) மாலை திண்டுக்கல்-குமுளி சாலையில் ஓரமாக நடந்து சென்று கொண்டிருந்துள்ளார். அப்பொழுது இவருக்கு பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதியது. இந்த விபத்தில் சுருளி படுகாயம் அடைந்த நிலையில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து வீரபாண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News January 1, 2026
தேனி: அனைத்து சேவைகளுக்கும் இந்த ஒரு லிங்க் போதும்.!

தேனி மக்களே.. ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகையை பார்க்க, வரி செலுத்த, வரி செலுத்திய விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம். இந்த லிங்கை <


