News March 27, 2024
தேனி: குடிபோதையில் விஷம் அருந்தியவர் பலி

தேனி அருகே அம்மாபட்டியை சேர்ந்தவர் பாண்டி. இவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி வீட்டில் தினமும் மனைவியுடன் சண்டையிட்டு வந்தார். அதை அவரது மகன்கள் தட்டிக் கேட்டபோது, தற்கொலை செய்து கொள்வேன் என மிரட்டி வந்தார். 25ம் தேதி மாலை குடிபோதையில் வீட்டிற்கு வந்தவர் விஷமருந்தி விட்டேன் என கூறி மயங்கினார். மருத்துவக் கல்லூரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்ட அவர் நேற்று உயிரிழந்தார்.
Similar News
News February 10, 2026
தேனி: அரசு வழங்கும் ரூ.15 லட்சம் தனிநபர் கடன் APPLY…

தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகம் (TABCEDCO) சார்பாக தனிநபர் கடன் ரூ.15 லட்சம் வரை பெறலாம். பிற்படுத்தபட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் 18 – 60 வயது வரை உள்ளவர்கள் இந்த திட்டம் மூலம் கடன் பெறலாம். இங்கு <
News February 10, 2026
பெரியகுளம்: இளம்பெண் கழுத்து அறுத்துக் கொலை

தேவதானப்பட்டி அருகே பொம்மிநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்தவர் தங்கமாரி. கணவரை பிரிந்து தனியாக வசித்து வருகிறார். இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த ராஜா என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து நேற்று இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டதில் ஆத்திரமடைந்த ராஜா கத்தியால் தங்கமாரியின் கழுத்தை அறுத்துக் கொலை செய்துவிட்டு தப்பியோடினார். இதுகுறித்து ஜெயமங்கலம் போலீசார் வழக்குப்பதிந்து ராஜாவை கைது செய்தனர்.
News February 10, 2026
தேனி: கஞ்சா வழக்கில் பெண் உள்பட 4 பேர் கைது

உத்தமபாளையம், கம்பம் பகுதிகளுக்கு வெளிமாநிலங்களில் இருந்து கஞ்சா கடத்தி வரப்படுவதாக SP-க்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் நேற்று மாவட்டம் முழுவதும் சோதனை மேற்கொண்டனர். அப்போது உத்தபாளையம்-குமுளி பைபாஸ் சாலையில் ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தனர். இதில், சாக்கு பைகளில் 21 கிலோ கஞ்சா கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. கஞ்சா கடத்தல் தொடர்பாக வனிதா, அகில் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.


