News September 20, 2025

தேனி: காவல்துறையில் 3,665 காலியிடங்கள்.! APPLY

image

தேனி மக்களே, தமிழ்நாடு காவல்துறையில் இரண்டாம் நிலை காவலர் பணிக்காக 3,665 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டிருந்தன. விண்ணப்பிக்க கடைசி தேதி நாளையுடன் (செப். 21) முடிவடைகிறது. கல்வி தகுதி – 10வது தேர்ச்சி. 18 வயது நிரம்பியவர்கள் <>இங்கு கிளிக் செய்து<<>> விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.18,200 முதல் 67,100 வரை வழங்கப்படும். இப்பயனுள்ள தகவலை எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் உடனே SHARE பண்ணுங்க.

Similar News

News November 15, 2025

தேனி: கேஸ் சிலிண்டர் வைத்திருபோர் கவனத்திற்கு

image

கேஸ் சிலிண்டரை புக்கிங் செய்ய போனில் இருந்து ஒரு SMS அனுப்பினாலே போதும். இண்டேன் சிலிண்டர் பயன்படுத்துவோர் ‘REFILL’ என டைப் செய்து 77189 55555 என்ற எண்ணுக்கு அனுப்ப வேண்டும். இதுவே பாரத் பயன்படுத்துவோர் 18002 24344 என்ற எண்ணுக்கும், எச்.பி. சிலிண்டர் பயன்படுத்துவோர் 1906 என்ற எண்ணுக்கு மெசேஜ் அனுப்பி அலைச்சல் இல்லாமல் சிலிண்டரை புக்கிங் செய்யலாம். இத்தகவலை இல்லத்தரசிகளுக்கு ஷேர் பண்ணுங்க!

News November 15, 2025

தேனி: காசநோய் பாதிப்பால் ஒருவர் தற்கொலை

image

மயிலாடும்பாறை பகுதியை சேர்ந்தவர் பங்காரு (49). இவருக்கு காச நோய் ஏற்பட்ட நிலையில் அதற்காக 6மாதங்களாக சிகிச்சை எடுத்து வந்துள்ளார். இருந்தபோதிலும் அவர் மது குடித்து வந்துள்ளார். அதனால் அவருக்கு கடந்த ஒரு மாத காலமாக தீராத வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. வலியின் வேதனையினால் பங்காரு நேற்று முன்தினம் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார் சம்பவம் குறித்து மயிலாடும்பாறை போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.

News November 14, 2025

தேனி: தலைவலியால் ஒருவர் விஷமருந்தி தற்கொலை.!

image

ஓடைப்பட்டி அருகே கரிச்சிபட்டியை சேர்ந்தவர் முருகன் (47). இவருக்கு 6 வருடங்களுக்கு முன்பு ஏற்பட்ட விதத்தின் காரணமாக தீராத தலைவலி இருந்து வந்துள்ளது. அதற்கு சிகிச்சை எடுத்தும் பலனளிக்காத காரணத்தினால் 2 தினங்களுக்கு முன்பு முருகன் விஷம் அருந்தி உள்ளார். அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் நேற்று (நவ.13) அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து ஓடைப்பட்டி போலீசார் வழக்கு பதிவு.

error: Content is protected !!