News October 3, 2025

தேனி: கழுத்தை நெறித்த கடனால் பறிபோன உயிர்

image

போடி பகுதியை சேர்ந்தவர் இன்பம் (50). இவர் மகளிர் குழுக்களில் லோன் எடுத்துள்ளார். அதற்கான தொகையை சரிவர கட்ட முடியாத நிலையில் வேதனையில் இருந்து வந்த இன்பம் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத பொழுது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து போடி நகர் போலீசார் நேற்று (அக்.2) வழக்கு பதிவு செய்து விசாரணை

Similar News

News October 3, 2025

தேனி: பட்டா வைத்திருப்பவர்களுக்கு GOOD NEWS

image

தேனி மக்களே, நில ஆவணங்கள் அனைத்தும் கணினிமயமாக்கப்பட்டு, பொதுமக்கள் எளிதாகப் பயன்படுத்தும் வகையில் eservices.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. இந்த இணையத்தில் உங்கள் நிலம் தொடர்பான விவரங்களை அறியலாம். மேலும் பட்டாவில் திருத்தம், பெயர் மாற்றம், நீக்கம் போன்ற சேவைகளுக்கு இதன் மூலமாக விண்ணப்பிக்கலாம். சந்தேகங்களுக்கு உங்கள் மாவட்ட அதிகாரியை 0454-6262112 அணுகலாம். SHARE பண்ணுங்க.

News October 3, 2025

தேனி: ரேஷன் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு!

image

ரேஷன் கடையில் கைரேகை சரியாக வேலை செய்யாததால் நமக்கு பின்னால் வந்தவர்கள் நமக்கு முன்னால் பொருட்கள் வாங்கி செல்வர். இந்த சிக்கலை தீர்க்க <>இங்கு க்ளிக் செய்து<<>> Grievance Redressal, மதுரை மாவட்டம், குடும்ப அட்டை எண் மற்றும் புகார் விவரங்களை குறிப்பிட்டு புகாரளித்தால் உங்கள் கைரேகை 7 – 10 நாட்களில் புதுப்பித்துவிடுவார்கள். புகாரில் தாமதமா : 1967 (அ) 1800-425-5901 அழையுங்க.. SHARE பண்ணுங்க.

News October 3, 2025

தேனியில் கல்லூரி மாணவியை 4 பேர் தாக்கினர்

image

தாமரைக்குளம் பகுதியை சேர்ந்தவர் ரம்யா தேவி (24). கல்லூரி மாணவியான இவரது பெற்றோருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ஈஸ்வரன், அவரது மகன் தவப்பாண்டி, மனைவி சத்யா, உறவினர் ஜீவா ஆகியோருக்கும் முன் விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் நான்கு பேரும் தனது பெற்றோரை அவதூறாக பேசியதை ரம்யா கண்டித்த நிலையில் அவர்கள் 4 பேரும் ரம்யாவை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். 4 பேர் மீதும் போலீசார் வழக்கு (அக்.2) பதிவு.

error: Content is protected !!