News June 8, 2024
தேனி கலெக்டர் அதிரடி உத்தரவு

தேனி மாவட்டத்தில் பொதுமக்கள் ஆன்லைன் மூலம் வருவாய்த்துறைக்கு விண்ணப்பிக்கப்படும் பல்வேறு விண்ணப்பங்களுக்கு 16 நாட்களுக்குள் தீர்வு கிடைத்திடும் வகையில் அதனை கண்காணிக்க தாலுகா வாரியாக 5 அலுவலர்களை நியமித்து கலெக்டர் ஷஜீவனா உத்தரவிட்டுள்ளார். மேலும் விண்ணப்பங்களை வரிசை அடிப்படையில் பரிசீலனை செய்து முடிவு செய்யப்படுவதை கண்காணித்திட வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Similar News
News April 21, 2025
தேனி மாவட்ட வட்டாட்சியர் அலுவலக எண்கள்!

▶️போடிநாயக்கனூர் வட்டாட்சியர் 04546280124
▶️உத்தமபாளையம் வட்டாட்சியர் 04554265226
▶️ஆண்டிபட்டி வட்டாட்சியர் 04546-242234
▶️தேனி வட்டாட்சியர் 4546-255133
▶️ பொியகுளம் வட்டாட்சியர் 0454623215
உங்களுக்கு தெரிந்த அனைவருக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்க.
News April 21, 2025
தனியார் பஸ்-வேன் மோதல்; வேன் டிரைவர் பலி

மதுரையில் இருந்து தேனிக்கு தனியார் பஸ் சென்றது. நேற்று மதியம் ஆண்டிப்பட்டி அருகே SSபுரம் சென்றபோது சிமென்ட் மூடைகள் ஏற்றி வந்த சரக்கு வேன் மீது பஸ் மோதியது. இதில் வேனின் முன் பகுதி நொறுங்கி பஸ்சின் அடிப் பகுதியில் சிக்கியது.இடிபாடுகளுக்குள் சிக்கிய வேன் டிரைவர் ஆண்டிபட்டி சீனிவாசா நகரை சேர்ந்த முத்துலிங்கம் 45, சம்பவ இடத்திலேயே பலியானார்.10க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
News April 21, 2025
வீரபாண்டி மாரியம்மன் அம்மனுக்கு சிறப்பு பூஜை

வீரபாண்டி ஸ்ரீ மாரியம்மன், 5ஆம் நாள் திருவிழாவை முன்னிட்டு நேற்று ஸ்ரீ மாரியம்மனுக்கு சிறப்பு பூஜைகள், சிறப்பான கரங்கள் நடைபெற்றன. இதில் வீரபாண்டி பொது மக்களுக்கு மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. இந்த பூஜைக்கான ஏற்பாடுகளையும் செயல் அலுவலர் செய்திருந்தார்.