News January 24, 2026
தேனி: கரண்ட் கட்.? இனி Whatsapp மூலம் தீர்வு..!

தேனி மாவட்டத்தில் உங்கள் பகுதியில் ஆபத்தான வகையில் உள்ள பழுதடைந்த மின்கம்பங்கள், மின்கம்பிகள், திடீர் கரண்ட் கட் உள்ளதா? இது குறித்து மின்வாரியத்திடம் WhatsApp மூலமாக எளிதில் புகாரளிக்க இந்த 89033 31912 எண்ணிற்கு எவ்வித அலைச்சலும் இல்லமால் போட்டோவுடன் புகாரளிக்கலாம். மேலும் அவசர உதவிக்கு – 94987 94987 இந்த எண்ணிலும் அழைக்கலாம். இத்தகவலை எல்லோரும் பயன்பெற SHARE பண்ணுங்க
Similar News
News January 31, 2026
தேனி: சிறுமி பாலியல் வழக்கில் குற்றவாளிக்கு தண்டனை

தேவாரத்தை சோ்ந்தவர் முருகன். இவர் 2025ம் ஆண்டு 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் கைது செய்யப்பட்டார். இதுகுறித்த வழக்கு விசாரணை தேனி மாவட்ட போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்ற நிலையில் வழக்கை விசாரித்த நீதிபதி முருகனுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.20,000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். மேலும், சிறுமியின் பராமரிப்பு செலவுக்கு ரூ.3 லட்சம் வழங்கவேண்டும் எனவும் உத்தரவிட்டார்.
News January 31, 2026
தேனி: ரூ.48,480 சம்பளத்தில் SBI வங்கியில் வேலை ரெடி!

தேனி மக்களே, SBI வங்கியில் காலியாக உள்ள 2050 Circle Based Officers (CBO) பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. 21 – 30 வயதுகுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் பிப் 18க்குள் இங்கு <
News January 31, 2026
தேனி: பைக் மோதி இளைஞர் பரிதாப பலி

தேவதானப்பட்டி பகுதியை சேர்ந்தவர் ஜீவா (23). இவர் நேற்று முன் தினம் மாலை தேவதானப்பட்டி பகுதியில் உள்ள சாலையில் அவரது பைக்கில் சென்றுள்ளார். அப்பொழுது எதிரே வந்த மற்றொரு பைக் இவர் பைக் மீது மோதியது. இந்த விபத்தில் ஜீவா படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து தேவதானப்பட்டி போலீசார் நேற்று (ஜன.30) வழக்குப்பதிவு செய்து விசாரணை.


