News April 7, 2024
தேனி: ஏப்ரல் 9ல் இபிஎஸ் பிரச்சாரம்

தேனி பங்களாமேடு பகுதியில் நாளை மறுநாள் (9.4.2024) முன்னாள் முதல்வர் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தேனி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் வி.டி.நாராயணசாமியை ஆதரித்து மாபெரும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசினார். இந்த பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் உதயகுமார், மாவட்ட செயலாளர்கள் முருக்கோடை ராமர், ஜக்கையன் ஆகியோர் பங்கேற்றனர்.
Similar News
News February 3, 2026
தேனி: பெண்களுக்கு ரூ.5 லட்சம் வரை வட்டியில்லா கடன்.. APPLY

லக்பதி திதி யோஜனா திட்டத்தின் கீழ் பெண்கள் தொழில் தொடங்குவதற்கு ரூ.5 லட்சம் வரை வட்டியில்லா கடன் வழங்கப்படுகிறது. இதற்கு மகளிர் சுய உதவிக் குழுவில் உறுப்பினராக இருக்கும் 18 -50 வயதுக்குட்பட்ட பெண்கள் விண்ணப்பிக்கலாம். ஆதார், பான் கார்டு, வருமான சான்று, சுய உதவிக்குழு உறுப்பினர் சான்றிதழுடன் அருகிலுள்ள சுய உதவிக்குழு அலுவலங்கள் (அ) <
News February 3, 2026
தேனி: பெண்ணை விமர்சித்த அரசு வழக்கறிஞர்

கோம்பையை சேர்ந்த தர்மர் உத்தமபாளையம் சார்பு நீதிமன்றத்தில் கூடுதல் அரசு வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். இவர் திமுக ஒன்றிய துணைச் செயலாளராக உள்ள மலர்விழி என்பவரை விமர்சித்து பேசிய ஆடியோ சமூக வலைதளங்களில் பரவியது. இதுகுறித்த புகாரில் தேனி மாவட்ட வன்கொடுமை தடுப்பு நீதிமன்ற நீதிபதி நேற்று தர்மரை 15 நாள் சிறையில் அடைக்க உத்தரவிட்டதை தொடர்ந்து, ஓடைப்பட்டி போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
News February 3, 2026
தேனி: இன்றைய மின் தடை பகுதிகள் அறிவிப்பு

தேனி மாவட்டம், ராசிங்காபுரம் துணை மின் நிலையத்தில் இன்று (பிப்.03) செவ்வாய்கிழமை மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளது. இதனால் ராசிங்காபுரம், சிலமலை, டி.ரங்கநாதபுரம், சங்கராபுரம், நாகலாபுரம், சூலப்புரம், பொட்டிப்புரம், சில்லமரத்துப்பட்டி ஆகிய பகுதிகளில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது. இந்த பயனுள்ள தகவலை எல்லோருக்கும் SHARE பண்ணுங்க.


