News December 24, 2024

தேனி எஸ்.பி அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி

image

தேனி மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் நேற்று (டிச.23) பெண் ஒருவர் தனது மூன்று குழந்தைகளுடன் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார். பெட்ரோலை பறிமுதல் செய்த போலீசார் நடத்திய விசாரணையில் தீக்குளிக்க முயன்ற பெண் ஜெயமங்கலத்தை சேர்ந்த சரவணன் மனைவி மகாலட்சுமி எனவும், கணவர் வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருப்பதகாகவும், எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தீக்குளிக்க முயன்றது தெரியவந்தது.

Similar News

News August 21, 2025

தேனி: 2833 காவலர் பணியிடம் அறிவிப்பு!

image

தமிழ்நாடு காவல்துறையில் 2833 காவலர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிகளுக்கு நாளை(ஆக.22) முதல் செப்.21ம் தேதி வரை இந்த <>லிங்கில்<<>> விண்ணப்பிக்கலாம். எழுத்து தேர்வு, உடல் தகுதி தேர்வு அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படும் இப்பணியிடங்களுக்கு கல்வித் தகுதியாக 10-ம் வகுப்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான எழுத்துத்தேர்வு நவ.9-ம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News August 21, 2025

தேனி மக்களே.. இந்த நம்பரை SAVE பண்ணிக்கோங்க..!

image

தேனி: உங்கள் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனை தொடர்பு எண்கள்:
▶️தலைமை மருத்துவமனை பெரியகுளம் – 04546-234292
▶️பெரியகுளம் – 9443804300
▶️ஆண்டிபட்டி- 9443927656
▶️சின்னமனூர் – 9442273910
▶️போடிநாயக்கனூா் – 9443328375
▶️உத்தமபாளையம் – 9894840333

News August 20, 2025

தேனியில் குறைதீர் கூட்டம் அறிவிப்பு

image

தேனி ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கத்தில் ஆக.22 அன்று காலை 10:30 மணியளவில் மாவட்ட ஆட்சியர் ரஞ்சித் சிங் தலைமையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் தேனி மாவட்டத்தில் உள்ள விவசாய சங்க பிரதிநிதிகள், விவசாய பிரதிநிதிகள், விவசாயிகள் உள்ளிட்டோர் தவறாமல் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு தங்கள் பிரச்சனைகளை தெரிவிக்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!