News April 20, 2025
தேனி உழவர் சந்தையில் காய்கறி விலை விபரம்

தேனி உழவர் சந்தையில் (ஏப்ரல் 20) கத்தரி ரூ.20/18, தக்காளி ரூ.17-14, வெண்டை ரூ.18, கொத்தவரை ரூ.16, சுரை ரூ.08, இஞ்சி ரூ.32, பாகல் ரூ.32, பீர்க்கை ரூ.35, பூசணி ரூ.14/10, மிளகாய் ரூ.30/20, அவரை ரூ.75-45, உருளை ரூ.28, கருணை ரூ.80, சேனை ரூ.58/55, உள்ளி ரூ.35/30, பல்லாரி ரூ.24, பீட்ரூட் ரூ.16, நூல்கோல் ரூ.28, பீன்ஸ் ரூ.44/40, கோஸ் ரூ.16, கேரட் ரூ.25/15, சவ்சவ் ரூ.12 க்கு விற்கப்படுகிறது.
Similar News
News November 4, 2025
தேனி: தகராறில் ஒருவருக்கு கத்தி குத்து

தேனி அல்லிநகரம் பகுதியை சேர்ந்த ராமசாமி (45). மற்றும் அதே பகுதியை சேர்ந்த முருகன் (43) என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்த முன் விரோதம் காரணமாக இருவருக்கும் தகராறு ஏற்பட்ட நிலையில் முருகன், ராமசாமியின் கழுத்தில் குத்தி காயம் ஏற்படுத்தி உள்ளார். இது குறித்து அல்லிநகரம் போலீசார் முருகன் மீது வழக்கு (நவ.3) பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News November 4, 2025
தேனியில் கபடி போட்டிக்கான வீரர்கள் தேர்வு

இந்தாண்டு நடைபெற உள்ள தேசிய இந்திய பள்ளிகளுக்கிடையிலான போட்டியில் தமிழக விளையாட்டு விடுதி கபடி அணி பங்கேற்க உள்ளது. இப்போட்டிக்கான வீரர்கள் தேர்வு தேனி மாவட்ட விளையாட்டு அரங்கில் நேற்று (நவ.3) துவங்கியது. போட்டிகள் 14,17,19 வயதிற்குட்பட்ட பிரிவுகளில் நடக்கிறது. தேனி, சிவகங்கை, விழுப்புரம் ஆகிய 3 மாவட்ட விளையாட்டு விடுதிகளில் இருந்து வீரர்கள் பங்கேற்றனர். இன்று போட்டிகள் முடிவடைகிறது.
News November 4, 2025
தேனி: ரூ.35,400 ஊதியத்தில் ரயில்வே வேலை

இந்திய ரயில்வே துறையில் சூப்பர்வைசர், ஸ்டேஷன் மாஸ்டர், கிளார்க் உள்ளிட்ட பணியிடங்களுக்கு 5,810 காலியிடங்கள் (தமிழ்நாடு -213) அறிவிக்கப்பட்டுள்ளன. ஏதேனும் ஒரு டிகிரி முடித்த 18 வயது நிரம்பியவர்கள் www.rrbchennai.gov.in என்ற தளத்தில் நவ.20 க்குள் விண்ணப்பிக்கலாம். இதில் ஊதியமாக ரூ.25,500 – ரூ.35,400 வரை வழங்கப்படும். இத்தகவலை டிகிரி முடித்தவர்களுக்கு உடனே SHARE பண்ணுங்க.


