News December 26, 2025
தேனி: இழந்த பணத்தை மீட்க புகார் எண்கள்..!

தேனி மக்களே, டிஜிட்டல் யுகத்தில், UPI பரிவர்த்தனை பிரபலமாக உள்ளது. தவறுதலாகப் பணம் அனுப்பிவிட்டால் கவலை வேண்டாம். உடனடியாகப் பணம் பெற்றவரைத் தொடர்பு கொள்ளவும். இல்லையெனில், Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) வாடிக்கையாளர் சேவை எண்களைத் தொடர்புகொண்டு புகார் தெரிவித்தால் உங்கள் பணத்தைத் திரும்பப் பெறலாம். SHARE பண்ணுங்க!
Similar News
News December 31, 2025
தேனி: முதியவருக்கு அரிவாள் வெட்டு!

போடி அருகே மீனாட்சிபுரம் பகுதியை சேர்ந்தவர் பாலு (62). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த அழகுராஜா என்பவருக்கும் பணம் கொடுக்கல் – வாங்கல் தொடர்பாக தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த அழகுராஜா, பாலுவை அரிவாளால் வெட்டினார். இதில் படுகாயமடைந்த பாலு தேனி அரசு மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து அழகுராஜா மீது போடி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.
News December 30, 2025
தேனி: கூட்டுறவு வங்கியில் வேலை! APPLY NOW!

கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் உள்ள தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கியில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: தமிழக அரசு வேலை
2. பணியிடங்கள்: 50
3. வயது: 18-50
4. சம்பளம்: ரூ.32,020 – ரூ.96,210
5. கல்வி தகுதி: Any Degree, B.E/B.Tech
6. கடைசி தேதி: 31.12.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க:<
அரசு வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை SHARE பண்ணுங்க.
News December 30, 2025
தேனி: சட்டவிரோதமாக மது விற்ற இளைஞர் கைது

உத்தமபாளையம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் சட்டவிரோத மது விற்பனை சம்பந்தமாக நேற்று (டிச.29) கூடலூர் பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அப்பகுதியைச் சேர்ந்த விக்னேஸ்வரன் (26) என்பவர் அப்பகுதியில் உள்ள சிக்கன் கடையில் வைத்து சட்டவிரோதமாக மது விற்பனை செய்தது தெரிய வந்தது. அவரிடம் இருந்த 30 மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் விக்னேஸ்வரன் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.


