News August 20, 2025

தேனி இளைஞர்களே.. நீதிமன்ற வேலை..! உடனே APPLY

image

தேனி இளைஞர்களே.., தமிழக நீதிமன்றங்களில் ASSISTANT PROGRAMMER பணியிடங்களுக்கு 41 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. கம்ப்யூட்டர் துறையில் டிகிரி (B.E/M.E உட்பட) முடித்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். வரும் செப். 9க்குள் உயர்நீதிமன்ற <>இணையதள பக்கத்திற்கு<<>> சென்று இதற்கு விண்ணப்பிக்க வேண்டும். எழுத்துத்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் மாவட்ட நீதிமன்றங்களில் பணியமர்த்தப்படுவர். SHARE IT.

Similar News

News February 4, 2026

தேனி: கஞ்சா பதுக்கிய இளைஞர் கைது

image

கம்பம் வடக்கு காவல் நிலைய போலீசார் குற்ற தடுப்பு சம்பந்தமாக நேற்று முன்தினம் (பிப்.2) கம்பம் பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அப்பகுதியை சேர்ந்த தௌபிக்கான் (29) என்பவர் கஞ்சாவை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் இருந்த கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் தௌபிக்கான் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

News February 3, 2026

தேனி மாவட்ட இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

image

தேனி மாவட்டத்தில் இன்று 03.02.2026 இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேவையுள்ளவர்கள் அந்தந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம் எனவும் தெரிவித்துள்ளது.

News February 3, 2026

தேனி: இனி பட்டா, சிட்டா அனைத்தும் Whatsapp-ல்!

image

தமிழக அரசு சொத்து தொடர்பான சேவையை WhatsAppல் வழங்க திட்டமிட்டுள்ளது.

1. 8188869996 எண்ணை Save பண்ணுங்க.

2. WhatsApp-ல் வணக்கம் அனுப்புங்க

3. மாவட்டம், கிராமம் விவரங்களை குறிப்பிட்டு (சொத்து நகல், ஈசி, பட்டா, சிட்டா) தேர்தெடுஙக.

4. நீங்கள் குறிப்பிட்ட சொத்து தொடர்பான அனைத்து தகவல்களும் WhatsApp -ல் கிடைக்கும்.

இந்த எண் விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளது. மற்றவர்கள் தெரிஞ்சுக்க Share பண்ணுங்க..!

error: Content is protected !!